திரைப்பட இயக்குனர் ஐசுவர்யா ரஜினிகாந்த் தனுஷ் | Film Director Aishwarya R. Dhanush

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் (பிறப்பு 1 சனவரி 1982) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகி மற்றும் நடனக்கலைஞரும் ஆவார். இவர் நன்கறியப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுசின் மனைவியும் ஆவார். தனது கணவர் தனுஷ் நடித்த 3 (2012) திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.


வாழ்க்கைக் குறிப்பு


சொந்த வாழ்க்கை


ஐசுவர்யா, நடிகர் ரஜினிகாந்த் – லதா இணையருக்கு முதலாவது மகளாகப் பிறந்தார். இவரது இளைய சகோதரி சௌந்தர்யாவும் தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். இவர், நடிகர் தனுசை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு யாத்ரா (பிறப்பு 2006), லிங்கா (பிறப்பு 2010) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.


திரை வாழ்க்கை


விஜய் தொலைக்காட்சியின் நடனப் போட்டி நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியில் ஜீவா, சங்கீதா, ஆகியோருடன் இணைந்து நடுவராகப் பங்கேற்றார். 2003 ஆம் ஆண்டில் வெளியான விசில் திரைப்படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து பாடிய பாடலின் மூலமாக பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 2010 ஆவது ஆண்டில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதுடன் அப்படத்தில் இடம்பெற்ற உன்மேல ஆசைதான் பாடலையும் பாடியிருந்தார்.


திரைப்பட விபரம்


இயக்குனராக

2012 3
2015 வை ராஜா வை

பின்னணிப் பாடகியாக

2003 நட்பே நட்பே
2010 உன் மேல ஆசை தான்

பின்னணிக் குரல் தருபவராக

2010 ரீமா சென்

பெற்ற விருதுகள்


இவர், தமிழக அரசின் கலைமாமணி விருதை நடனத்திற்காக பெற்றுள்ளார்.

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் ஐசுவர்யா ரஜினிகாந்த் தனுஷ் – விக்கிப்பீடியா

Film Director Aishwarya R. Dhanush – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *