திரைப்பட இயக்குனர் எல். ராஜா | Film Director L. Raja

எல். ராஜா (L. Raja) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றுகிறார்.


தொழில்


ராஜா இயக்குனர் ராஜசேகரின் உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஏ. வி. எம் நிறுவனம் 1987 ஆம் ஆண்டில் தயாரித்த சங்கர் குரு படத்தில் இயக்குநராக அறிமுகமானார். இவர் ஒன்பது படங்களில் இயக்குநராக பணியாற்றினார், அதில் ஆறு படங்கள் அர்ஜுன் நடித்தவை. சுமார் 30 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் ராஜா நடித்தார். இது இவரது நடிப்புக்கான அறிமுகமாக ஆனது. அதன்பின்னர் இவர் நாடோடிகள் உட்பட 35 படங்களில் நடித்துள்ளார். அப்படத்தில் இவர் சசிகுமாரின் தந்தையாக நடித்தார்.


ரகுவம்சம் தொலைக்காட்சி தொடரில் அறிமுகமான இவர் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார். பின்னர் இவர் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். மேலும் ராடான் மீடியாவொர்க்சிற்காக இதி கத காது மற்றும் நின்னு பெல்லாதுதா ஆகிய இரண்டு தொடர்களை இயக்கினார். ஏ.வி.எம் புரொடக்சன்சின் மௌன நடன நாடகமான ஹிம்சவேதத்தை இயக்கினார்.


தனிப்பட்ட வாழ்க்கை


இவர் நடிகை ஈஸ்வரி ராவை திருமணம் செய்து கொண்டார்.


திரைப்படவியல்


இயக்குநராக


  • சங்கர் குரு (1987)

  • தாய் மேல் ஆணை (1988)

  • காளிச்சரண் (1988)

  • குற்றவாளி (1989)

  • வேட்டையாடு விளையாடு (1989)

  • சொந்தக்காரன் (1989)

  • துருவ நாட்சதிரம் (1993)

  • தூள் பறக்குது (1993)

  • இதி கத காது ( ஈடிவி )

  • நின்னி பெல்லாடுதா ( ஜெமினி டிவி )
  • விருதுகள் மற்றும் பரிந்துரைகள்


  • குட்டும்பம் விருதுகள் 2020 – திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் பங்களித்தமைக்கான சிறப்பு விருது

  • நடிகராக

    2008 முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு
    2009 நாடோடிகள
    2010 வெளுத்து கட்டு
    தில்லாலங்கடி
    கல்லூரி காலங்கள்
    அகம் புறம்
    அபூர்வராகம்
    2011 மார்கழி 16
    போடிநாயக்கனூர் கணேசன்
    வித்தகன்
    2012 கொண்டன் கொடுத்தான்
    திருத்தணி
    2017 யானும் தீயவன்
    சென்னை 2 சிங்கப்பூர்
    2018 இரவுக்கு ஆயிரம் கண்கள்
    2019 பஞ்சட்சரம்

    தொடர்கள்

    2000-2001 வாழ்கை
    2011-2012 பிரிவோம் சாந்திப்போம்
    2011 மகாலட்சுமி நிவாசம்
    2011-2013 உத்திரிபூக்கள்
    2011-2012 மா நானா
    2014–2018 தாமரை
    2017 கங்கை
    2017–2018 நெஞ்சம் மறப்பத்தில்லை
    2017–2019 பூவே பூச்சுடவா
    2018–2019 கண்மணி
    2019 – தற்போது வரை பொண்ணுகு தங்க மனசு
    இரட்டை ரோஜா

    வெளி இணைப்புகள்

    திரைப்பட இயக்குனர் எல். ராஜா – விக்கிப்பீடியா

    Film Director L. Raja – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *