எம். சரவணன் இந்திய தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். இவர் 2011இல் இயக்கிய எங்கேயும் எப்போதும் திரைப்படம் மூலம் புகழ்பெற்றார்.
திரை வாழ்க்கை
சரவணன் இயக்குனர் ஏ. ஆர் முருகதாசிடம் துணை இயக்குனராக வேலை செய்தார். 2011இல் ஏ. ஆர். முருகதாஸ் தயாரிப்பில் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கினார். இப்படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றதுடன், மக்களிடம் நல்ல கருத்திற்காக பாராட்டுகளையும் பெற்றது.
விருதுகள்
2012இல் சிறந்த இயக்குனருக்கான எடிசன் விருதினைப் பெற்றவர்.
திரைப்படங்கள்
2009 | கணேஷ் ஜஸ்ட் கணேஷ் |
---|---|
2011 | எங்கேயும் எப்போதும் |
2013 | இவன் வேற மாதிரி |
2015 | வலியவன் |
2016 | சக்ரவியூகம் |
2019 | “ராங்கி” |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் எம். சரவணன் – விக்கிப்பீடியா
Film Director M. Saravanan – Wikipedia