எஸ். பி. காந்தன் (S.B. Khanthan), தமிழ் மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார்.
தொழில்
ஹரிகதா கலாட்சேபம் புகழ் டி. எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரியின் மகனான எஸ். பி. காந்தன் பட்டயக் கணக்கர் தொழில் செய்து கொண்டிருந்த போது, மேடை நாடக நடிகரும் மற்றும் திரைப்பட நடிகருமான, தனது சகோதரர் மௌலியின் தாக்கத்தால், காந்தன், நகைச்சுவை மேடை நாடகங்களை இயக்கினார். பின்னர் பட்டயக் கணக்கர் வேலையை விட்டுவிட்டு, கிரேசி மோகன் எழுத்தில், கிரேசி மோகன், மாது பாலாஜி, ஆர். நீலகண்டன் மற்றும் சீனு மோகன் ஆகியோர் நடிப்பில் முழு நகைச்சுவை மேடை நாடகங்களின் இயக்கப் பணியை மேற்கொண்டார். மேலும் தொலைக்காட்சித் தொடர் இயக்குநராகவும் மற்றும் ஆவணப்பட இயக்குநராகவும் செயல்படுகிறார்.
காந்தனின் தொலைக்காட்சித் தொடர்கள்
கிரேசி மோகன் எழுதிய கீழ்கண்ட தொலைக்காட்சி நாடகங்களை எஸ். பி. காந்தன் இயக்கியுள்ளார்.
வெளியிட்ட குறுந்தகடுகள்
வெளிநாட்டு வாழ் தமிழர்கள் காண்பதற்கு வேண்டி, கிரேசி மோகன் எழுதிய நாடகங்களை எஸ். பி. காந்தன் குறுந்தகடுகளில் பதிந்து வெளியிட்டுள்ளார்.
பிற தகவல்கள்
தனது சகோதரர் மௌலி எழுதிய நான் ரெடி நீ ரெடியா எனும் மேடை நாடகத்தை எஸ். பி. காந்தன் இயக்கி, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 40 வாரத் தொடர்களாக வெளியானது. காந்தன் இயக்கிய சாருலதா எனும் தொடர் 40 வாரங்களாக சன் தொலைக்காட்சியில் வெளியானது. மேலும் எஸ். பி. காந்தன் விளம்பரப் படங்கள் மற்றும் ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார்.
2006-இல் நகைச்சுவை மற்றும் காதல் உணர்வுடன் கூடிய ஜெர்ரி எனும் திரைப்படத்தை காந்தன் இயக்கியுள்ளார்.