எஸ். பி. ஜனநாதன் (மே 7, 1959 – மார்ச் 14, 2021) இந்திய தமிழ் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். இவருடைய முதல் படமான இயற்கை தேசிய விருதினை வென்றது. இவருடைய படங்கள் சமூக அக்கறை கொண்டனவாக வெளிவந்து புகழ் பெற்றன. இவர் இயக்குநர் சங்கத்தின் பொருளாளராகப் பணியாற்றியவர். புறம்போக்கு என்கிற பொதுவுடமை திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார்.
திரைப்படங்கள்
மறைவு
ஜனநாதன் 2021 மார்ச் 14 அன்று சென்னை மருத்துவமனை ஒன்றில் தனது 61-வது அகவையில் காலமானார்.
ஆதாரங்கள்
2003 | இயற்கை (திரைப்படம்) |
---|---|
2006 | ஈ |
2009 | பேராண்மை |
2015 | புறம்போக்கு என்கிற பொதுவுடமை |
2015 | பூலோகம் (திரைப்படம்) |
2020 | லாபம் |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் எஸ். பி. ஜனநாதன் – விக்கிப்பீடியா