கே. சங்கர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். 1926 மார்ச்சு 17 அன்று மலபாரில் (தற்போதைய கேரளம்) பிறந்த இவர் 80க்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
திரை வாழ்க்கை
இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏ. வி. எம் படத்தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படத்தொகுப்பாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய சங்கர், பின்னர் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் டாக்டர் என்னும் சிங்கள மொழித் திரைப்படமாகும்.கடும் உழைப்பால் டைரக்டராக உயர்ந்த கே.சங்கர் எம். ஜி. ஆர், சிவாஜி படங்களை இயக்கினார் இவர் எம். ஜி. இராமச்சந்திரன் நடித்த பணத்தோட்டம், கலங்கரை விளக்கம், குடியிருந்த கோயில், அடிமைப் பெண், சிவாஜி கணேசன் நடித்த ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, அன்புக்கரங்கள் என். டி. ராமராவ் நடித்த பூகைலாஷ், ஜெயலலிதா நடித்த கௌரி கல்யாணம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலமாக தென்னிந்தியாவின் மூன்று முதல்வர்கள் நடித்த திரைப்படங்களை இயக்கியவர் என்ற பெருமை பெற்றவர்.
மேலும் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பின்னர் தாய் மூகாம்பிகை, வருவான் வடிவேலன் உள்ளிட்ட பக்தித் திரைப்படங்களை இயக்கினார். இவர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தமிழ்நாடு அரசின் ராஜா சாண்டோ விருதினைப் பெற்றுள்ளார்.
திரைப்பட விபரம்
இது முழுமையான பட்டியல் அல்ல.
மறைவு
தனது மனைவி மற்றும் 6 குழந்தைகளுடன் வசித்து வந்த சங்கர், மாரடைப்பின் காரணமாக 2006 மார்ச்சு 5 அன்று இரவு 7 மணியளவில் தனது 80 ஆவது அகவையில் காலமானார்.
1954 | பெண் |
---|---|
1956 | நாக தேவதை |
1959 | ஒரே வழி |
1959 | சிவகங்கை சீமை |
1960 | கவலை இல்லாத மனிதன் |
1960 | கைராசி |
1962 | பாத காணிக்கை |
1962 | ஆலயமணி |
1962 | ஆடிப்பெருக்கு |
1963 | ஏழை பங்காளன் |
1963 | பணத்தோட்டம் |
1963 | இது சத்தியம் |
1964 | ஆண்டவன் கட்டளை |
1965 | பஞ்சவர்ணக் கிளி |
1965 | கலங்கரை விளக்கம் |
1965 | அன்புக்கரங்கள் |
1966 | சந்திரோதயம் |
1966 | கௌரி கல்யாணம் |
1968 | குடியிருந்த கோயில் |
1968 | கல்லும் கனியாகும் |
1969 | அடிமைப் பெண் |
1975 | பல்லாண்டு வாழ்க |
1976 | உழைக்கும் கரங்கள் |
1977 | இன்றுபோல் என்றும் வாழ்க |
1978 | வருவான் வடிவேலன் |
1978 | வயசு பொண்ணு |
1978 | குங்குமம் கதை சொல்கிறது |
1979 | சுப்ரபாதம் |
1979 | நீலக்கடலின் ஓரத்திலே |
1980 | மன்மத ராகங்கள் |
1981 | தேவி தரிசனம் |
1982 | தெய்வத் திருமணங்கள் |
1982 | இரட்டை மனிதன் |
1982 | தாய் மூகாம்பிகை |
1983 | மிருதங்க சக்கரவர்த்தி |
1983 | யாமிருக்க பயமே |
1984 | சிரஞ்சீவி |
1984 | எழுதாத சட்டங்கள் |
1985 | நவக்கிரக நாயகி |
1985 | ராஜரிஷி |
1986 | நம்பினார் கெடுவதில்லை |
1986 | ஆயிரம் கண்ணுடையாள் |
1987 | வேலுண்டு வினையில்லை |
1987 | முப்பெரும் தேவியர் |
1988 | தம்பி தங்கக் கம்பி |
1989 | மீனாட்சி திருவிளையாடல் |
1993 | நல்லதே நடக்கும் |
1996 | வெற்றி விநாயகர் |