திரைப்பட இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு | Film Director Krishnan Panju

கிருஷ்ணன்-பஞ்சு ஓர் இந்தியத் திரைப்பட இரட்டை இயக்குநர்கள் ஆவர். ரா. கிருஷ்ணன் (1909–1997) மற்றும் சா. பஞ்சு (1915–1984) ஆகிய இருவரும் இணைந்து கிருஷ்ணன்-பஞ்சு என்ற பெயரில் 50இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியிருந்தனர்.


வாழ்க்கைக் குறிப்பு


தொடக்ககால வாழ்க்கை


ரா. கிருஷ்ணன் 1909 சூலை 18 அன்று தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். தொடக்கத்தில், கோவையில் செயல்பட்டு வந்த பக்சிராஜா ஸ்டுடியோவில் (அப்போதைய கந்தன் ஸ்டுடியோ) பணியாற்றினார்.


சா. பஞ்சு 1915 சனவரி 24 அன்று தமிழ்நாட்டின் கும்பகோணம் அருகிலுள்ள உமையாள்புரத்தில் பிறந்தார். தொடக்கத்தில் பி. கே. ராஜா சாண்டோவிடம் உதவி படத்தொகுப்பாளராகவும், எல்லிஸ் ஆர். டங்கனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். இவர் பஞ்சாபி என்ற பெயரில் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியவர்.


மறைவு


1984 ஏப்ரல் 6 அன்று சா. பஞ்சு தனது 69 ஆவது வயதில் சென்னையில் காலமானார். பஞ்சு இறந்த பின்னர் எந்த படத்தையும் இயக்காதிருந்த ரா. கிருஷ்ணன், 1997 சூலை 17 அன்று தனது 87 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.


இயக்கிய திரைப்படங்கள்

1944 பூம்பாவை
1947 பங்கஜவல்லி
1947 பைத்தியக்காரன்
1949 ரத்தினகுமார்
1949 நல்ல தம்பி
1952 பராசக்தி
1953 கண்கள்
1954 ரத்தக்கண்ணீர்
1955 சந்தா சகு
1956 குலதெய்வம்
1957 புதையல்
1957 பாபி
1958 மாமியார் மெச்சின மருமகள்
1959 பர்க்கா
1960 திலகம்
1960 தெய்வப்பிறவி
1960 பிந்த்யா
1961 சுகா சிந்தூர்
1962 சாதி
1962 மேன் மௌஜி
1963 குங்குமம்
1964 வாழ்க்கை வாழ்வதற்கே
1964 சர்வர் சுந்தரம்
1964 மேரா குசார் கியா கை
1965 குழந்தையும் தெய்வமும்
1966 பெற்றால்தான் பிள்ளையா
1966 லேத மனசுலு
1966 லாலா
1968 டு கலியான்
1968 உயர்ந்த மனிதன்
1969 அன்னையும் பிதாவும்
1970 எங்கள் தங்கம்
1970 அனாதை ஆனந்தன்
1971 மெயின் சுந்தர் கூன்
1972 பிள்ளையோ பிள்ளை
1972 இதய வீணை
1972 அக்கா தம்முடு
1973 பூக்காரி
1974 சமையல்காரன்
1974 சந்தார்
1974 பத்து மாத பந்தம்
1974 கலியுக கண்ணன்
1975 வாழ்ந்து காட்டுகிறேன்
1975 காசுமீர் பல்லோடு
1975 அணையா விளக்கு
1976 வாழ்வு என் பக்கம்
1976 இளைய தலைமுறை
1976 என்ன தவம் செய்தேன்
1977 சொன்னதைச் செய்வேன்
1977 சக்கரவர்த்தி
1978 பேர் சொல்ல ஒரு பிள்ளை
1978 அண்ணபூரணி
1979 வெள்ளி ரதம்
1979 நீலமலர்கள்
1979 நாடகமே உலகம்
1980 மங்கல நாயகி
1985 மலரும் நினைவுகள்

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு – விக்கிப்பீடியா

Film Director Krishnan Panju – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *