திரைப்பட இயக்குனர் பத்ரி | Film Director Badri

பத்ரி என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் திரையுலகில் பணியாற்றுகிறார். மலர்கள் என்ற தொலைக்காட்சித் தொடரில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய இவர் 2007 ஆம் ஆண்டில் வீராப்பு படத்தின் வழியாக திரைப்படத் துறையில் அறிமுகமானார்.


தொழில்


சன் தொலைக்காட்சிக்காக ஆடுகிறான் கண்ணன், மலர்கள் போன்ற தொலைக்காட்சி தொடர்களை இயக்கி பத்ரி தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இவர் சுந்தர் சி.யின் உதவியாளராக பணியாற்றுவதன் வழியாக திரைப்படங்களுக்கு மாறினார். அதன் பிறகு மலையாள திரைப்படமான ஸ்படிகத்தின் மறு ஆக்கமான வீராப்பு படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் 2007 இல் கலவையான விமர்சனங்களுடன் வெளியானது, ஒரு விமர்சகர் இது ஒரு “நகைச்சுவையான வணிக பொழுதுபோக்கு” என்று கூறினார். மற்றொரு விமர்சகர் இது அசல் படம் போல சிறப்பானதல்ல என்று கருதினார். இவர் மீண்டும் சுந்தர் சி நடிக்க ஐந்தாம் படை படத்தை இயக்கினார். இப்படத்தில் மலையாள திரைப்படமான தேவசுரம் படத்தின் காட்சிகளைத் திருடியுள்ளதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டினர். மேலும் படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.


பின்னர் இவர் பரத் நடிக்க தம்பிக்கு இந்த ஊரு படத்தை எழுதி இயக்கினார், படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை. பின்னர் சுந்தர் சி இயக்கிய கலக்கலாப்பு படத்தின் உரையாடலை எழுதினார்.


ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு படத்தின் மறு ஆக்கத்தை இயக்க சிவாவும், வேந்தர் மூவிசும் பத்ரியை அணுகினர். திறந்த மனதுடன் தில்லு முல்லு படத்தின் பணிகளில் நுழைந்ததாக பத்ரி கூறினார். “நான் கதைக்களத்தை சமகாலக் கதையாக்க விரும்பினேன். அசலில் இருந்து எழுத்துக்களைத் தக்க வைத்துக் கொண்டு, இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு எழுதினேன் “. இப்படத்தின் பணிகள் 24 ஆகத்து 2012 அன்று சென்னையில் உள்ள எம். ஆர். சி நகரில் உள்ள அரங்கில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. விழாவில் கார்த்தி, சினேகா, பிரசன்னா, மீனா, எஸ். ஏ. சந்திரசேகர், அம்பிகா, விஜய் ஆண்டனி, கே. பாலசந்தர், வாலி, தரணி ஆகிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். சென்னை மற்றும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் படக்குழு துபாய், அபுதாபிக்கு ஒரு சில பாடல்களையும் காட்சிகளை எடுக்க சென்றது. ராகங்கள் பதினாறு பாடல் துபாயில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு 2013 மார்ச்சில் நிறைவடைந்தது. படப்பிடிப்பை முடித்தபின், பத்ரி ‘தில்லு முல்லு’ மறுகலவை இசை காணொளியை படமாக்க முடிவு செய்து, எம். எஸ். விஸ்வநாதனை யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பாடலில் தோன்றும்படி செய்தார். முன்னதாக மறைந்த தேங்காய் சீனிவாசன் நடித்த கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்தார். இயக்குனர் பத்ரி கூறுகையில், “தேங்காய் சீனிவாசனின் பாத்திரத்தில் ஒருவரை நடிக்க வைப்பது சவாலானது. பிரகாஷ் ராஜை தவிர வேறு யாரையும் என்னால் நினைக்க முடியவில்லை “. சௌகார் ஜானகியின் பாத்திரத்தில் நடிக்க கோவை சரளா தேர்வு செய்யப்பட்டார். கமல்ஹாசன் செய்திருந்த விருந்தினராக தோற்றத்தை சந்தானத்தைக் கொண்டு செய்வித்தார்.


தில்லு முல்லு கலவையான விமர்சனங்களைப் பெற்றது. டைம்ஸ் ஆப் இந்தியாவின் எம். சுகந்த் 3.5 / 5 ஐக் கொடுத்து, “இந்த (படத்திற்கான) சிறப்பின் பெருமளவு இயக்குனர் பத்ரிக்குத்தான் செல்ல வேண்டும், அதன் கதையை தெளிவாகக் கூறுகிறார். ”


திரைப்படவியல்

2007 வீராப்பு
2009 ஐந்தாம் படை
2010 தம்பிக்கு இந்த ஊரு
2012 கலகலப்பு
2013 தில்லு முல்லு
2014 ஆடாம ஜெயிச்சோமடா
2019 ஆக்‌ஷன்
2020 நாங்க ரொம்ப பிசி

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் பத்ரி – விக்கிப்பீடியா

Film Director Badri – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *