திரைப்பட இயக்குனர் பரதன் | Film Director Bharathan

பரதன் (Bharathan) என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள சென்னையைச் சேர்ந்த ஓர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். திரைப்பட இயக்குநர் தரணியிடம் உதவி இயக்குநராக பணியாற்ற ஆரம்பித்ததிலிருந்து இவரது சினிமா வாழ்க்கை ஆரம்பமானது. இவர், 2001 இல் வெளிவந்த விக்ரமின் தில் மற்றும் தரணி இயக்கிய விஜயின் கில்லி, மதுர ஆகியவற்றுக்கும் இயக்குநர் சிவா இயக்கிய அஜித்தின் வீரம் திரைப்படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார். விஜயின் நடிப்பில் பரதன் முதலாவதாக இயக்கிய அழகிய தமிழ்மகன் திரைப்படம் வருவாயில் குறைந்த அளவையே பெற்றுக் கொண்டது. இவரது இரண்டாம் திரைப்படமான அத்தி சராசரியான வருவாயைப் பெற்றுக்கொண்டது.விஜயின் அறுபதாவது திரைப்படமான பைரவாவினை இவர் இயக்குகின்றார்.


திரைப்படப்பட்டியல்

ஆண்டு திரைப்படம் செயல்
2001 தில் எழுதுநர்
2001 தூள் எழுதுநர்
2004 கில்லி எழுதுநர்
2004 மதுர எழுதுநர்
2007 அழகிய தமிழ்மகன் இயக்குநர், எழுதுநர்
2011 ஒஸ்தி எழுதுநர்
2014 வீரம் எழுதுநர்
2014 அத்தி இயக்குநர், எழுதுநர்
2017 பைரவா இயக்குநர், எழுதுநர்

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் பரதன் – விக்கிப்பீடியா

Film Director Bharathan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *