திரைப்பட இயக்குனர் பாரதி கண்ணன் | Film Director Bharathi Kannan

எஸ். பாரதி கண்ணன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழ் படங்களை இயக்கியுள்ளார். 1990 களில் மற்றும் 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இவர் சுறுசுறுப்பாக இயங்கிவந்தார். இவர் பக்தி படங்களில் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார்.


தொழில்


இவர் தன்னுடைய தொழில் வாழ்க்கையில் 1981இல், நெல்லை சுந்தர்ராஜனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு இந்த பணியைத் தொடர்ந்தார். அதே நேரத்தில் நடிகராக சில படங்களில் துணை வேடங்களில் தோன்றினார். அவை குறிப்பாக நெத்தியடி, ஜாடிக்கேத்த மூடி (1989) போன்றவை ஆகும். பின்னர் இவர் இயக்குநர் கே. சங்கரின் படங்களில் தொடர்ச்சியாக பணியாற்றினார். அதே நேரத்தில் தனது முதல் திரைக்கதைக்கு தயாரிப்பாளரைத் தேடினார். இதற்கிடையில், குணா மற்றும் பாண்டியன் படங்களுக்கு திருநெல்வேலி விநியோகஸ்தராகவும் இருந்தார்.


பாரதி கண்ணன் 1996 இல் தனது முதல் படமாக அருவா வேலு படத்தை உருவாக்கினார். அவரது இந்தப் படைப்பு சராசரி விமர்சனங்களை பெற்றது. பின்னர் ஆர். பி. சௌத்ரி தயாரித்த நடுத்தர செலவில் தயாரிக்கபட்ட அதிரடி திரைப்படமான திருநெல்வேலி (2000) படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்பட்டது. இப்படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் இந்த படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது. பின்னர் இவர் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி (2001), ஸ்ரீ பன்னாரி அம்மான் (2002) என்று தொடர்ச்சியாக இந்து பக்தித் திரைப்படங்களை இயக்கிநார். ஒரு விமர்சகர் பிந்தைய படங்களை “பயங்கரமானவை” என்று முத்திரை குத்தினார். மேலும் “படத்தின் இயக்குனர் பாமர மக்களுக்கான அத்தகைய படங்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். ” என்றார்.


2004 ஆம் ஆண்டில், இவர் வயசு பசங்க படத்தை இயக்கினார். இது விடலைப் பருவத்தினரின் கதையாகும். இப்படமானது எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது ஒரு விமர்சகர் “சில பக்திகளை இயக்கிய பிறகு, பாரதி கண்ணன் வேறு விஷயத்தில் முயற்சித்துள்ளார். ஆனால் இப்படத்தின் வழியாக புரிந்து கொள்வது என்னவென்றால், அவர் தனது சமூக-மத வகை படங்களை உருவாக்குவதே நல்லது ” என்றார். பின்னர் இவர் லிவிங்ஸ்டன், விந்தியா ஆகியோர் நடித்த காதல் காவியம் என்ற திரைப்படத்தை உருவாக்கத் தொடங்கினார், ஆனால் பின்னர் படத்தின் பணிகள் நின்றன.


இவர் மிகச் சமீபத்திய இயக்கிய கரகாட்டக்காரி கவனிக்கப்படாமல் போனது. பின்னர் பரதிகண்ணன் படங்களை இயக்குவதிலிருந்து ஒதுங்கி தொலைக்காட்சி தொடர்களில் குறிப்பாக கோலங்கள், ராஜகுமாரி ஆகியவற்றில் துணை வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.


திரைப்படவியல்


இயக்குனர்

1996 அருவா வேலு
1998 கண்ணாத்தாள்
2000 திருநெல்வேலி
2001 ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
2002 ஸ்ரீ பண்ணாரி அம்மான்
2003 விஜயதசாமி
2004 வயசு பசங்க
2005 கரகாட்டக்காரி
2005 லவ் ஸ்டோரி

நடிகர்

ஆண்டு திரைப்படம் / தொலைக்காட்சி குறிப்புகள்
1998 கண்ணாத்தாள்
2004 வயசு பசங்க
2005 கஸ்தூரி மான்
2005 பேசுவோமா
2007 மாயக் கண்ணாடி
2009 கோலங்கள் தொலைக்காட்சித் தொடர்
2009-2011 மாதவி தொலைக்காட்சித் தொடர்
2010 கச்சேரி ஆரம்பம்
2010 சிங்கம்
2013 ராஜகுமாரி தொலைக்காட்சி தொடர்
2014 கயல்
2015 ஆதிபர்
2015 சவாலே சமாளி
2015 தி எல்லோ பெஸ்டிவல் குறும்படம்
2016 மருது
2016 தொடரி
2017 ப. பாண்டி
2017 பொதுவாக எம்மனசு தங்கம்
2018 மன்னர் வகையறா
2018 பக்கா
2019 பாண்டவர் இல்லம் தொலைக்காட்சி தொடர்

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் பாரதி கண்ணன் – விக்கிப்பீடியா

Film Director Bharathi Kannan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *