சி. வி. ராமன் (இறப்பு: செப்டம்பர் 17, 1947) 1930-40களில் பிரபலமான ஒரு தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். பல புராணப் படங்களைத் தயாரித்துப் புகழ் பெற்றவர். இளங்கலை, மற்றும் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்.
சி. வி. ராமன் சிவகங்கையைச் சேர்ந்தவர். இவர் சென்னையில் சுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோவிற்கு அருகே ஆற்காடு நவாபிடம் இருந்து குத்தகைக்கு ஒரு காணி பெற்று கலையகம் அமைத்திருந்தார். சாண்டோ சின்னப்பா தேவர் ஆரம்பத்தில் இவரின் கீழ் பணி புரிந்தவர்.
இயக்கிய திரைப்படங்கள் சில
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் சி. வி. ராமன் – விக்கிப்பீடியா