சித்ராலயா கோபு (Chitralaya Gopu) என்பவர் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் ஆவார். இவர் ஏறக்குறைய 60 படங்களுக்கு எழுதியும், 27 படங்களை இயக்கியுள்ளார். இவர் மூன்று தெய்வங்கள் , சாந்தி நிலையம் போன்ற உணர்வு பூர்வமான படங்களுக்கும், காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், உத்தரவின்றி உள்ளே வா போன்ற நகைச்சுவை படங்களுக்கும் திரைக்கதை அமைத்துள்ளார்.
வாழ்கை
ஸ்ரீதரும் சடகோபனும் செங்கல்பட்டு புனித ஜோசப் உயர்நிலைப் பளியில் பயிலும் காலத்திலிருந்து பல்ய நண்பர்கள். இருவரும் நாடக எழுத்தாளர்கள்; ஸ்ரீதர் மேடை நாடகங்களை எழுதி நாயகனாக நடித்தார், அதேசமயம் சடகோபன் நாடகத்தின் நகைச்சுவைப் பகுதிகளை எழுதி, நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்று நடித்தார். பின்னர், ஸ்ரீதருக்கு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தபோது, நகைச்சுவையைப் பகுதிகளை உருவாக்க சடகோபனை அழைத்துக்கொண்டார். கல்யாணப் பரிசு (1959) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஸ்ரீதர் சொந்த தயாரிப்பு நிறுவனமாக சித்ராலயாவைத் தொடங்கினார். சடகோபன் சித்ராலயா கோபு என்ற பெயரில் புகழ்பெற்றார்.
இவர் 1992 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கலைமாமணி விருதைப் பெற்றார்.
அமெரிக்காவில் படம்பிடிக்கப்பட்ட வாஷிங்டனில் திருமணம் என்ற தொலைக்காட்சித் தொடரை இவர் நடித்து இயக்கியுள்ளார்.
பணியாற்றிய திரைப்படங்கள்
1959 | கல்யாண பரிசு |
---|---|
1962 | நெஞ்சில் ஓர் ஆலயம் |
1964 | காதலிக்க நேரமில்லை |
1964 | கலைக்கோவில் |
1966 | பியார் கியா ஜா |
1966 | கொடிமலர் |
1967 | நெஞ்சிருக்கும் வரை |
1967 | ஊட்டி வரை உறவு |
1967 | அனுபவம் புதுமை |
1968 | கலாட்டா கல்யாணம் |
1969 | சாந்தி நிலையம் |
1970 | வீட்டுக்கு வீடு |
1971 | மூன்று தெய்வங்கள் |
1971 | சுமதி என் சுந்தரி |
1971 | உத்தரவின்றி உள்ளே வா |
1972 | காசேதான் கடவுளடா |
1974 | அத்தையா மாமியா |
1974 | பெண் ஒன்று கண்டேன் |
1974 | கலாட்டே சம்சாரா |
1977 | காலமடி காலம் |
1977 | ராசி நல்ல ராசி |
1979 | அலங்காரி |
1979 | ஆசைக்கு வயசில்லை |
1979 | தைரியலட்சுமி |
1984 | ராஜா வீட்டு கண்ணுக்குட்டி |
1985 | தங்க மாமா 3D |
1985 | வெள்ளை மனசு |
1985 | தென்றலே என்னைத் தொடு |
1988 | வசந்தி |
1988 | பாட்டி சொல்லைத் தட்டாதே |
1989 | டெல்லி பாபு |
1990 | உலகம் பிறந்தது எனக்காக |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் சித்ராலயா கோபு – விக்கிப்பீடியா