கே. சுபாஷ் (பிறப்பு: சங்கர் கிருஷ்ணன்) தமிழ், இந்தி திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் ஆவார். விஜயகாந்த் நடித்த சத்ரியன், அஜித் குமார் நடித்த பவித்ரா, ஆயுள் கைதி, பிரபுதேவா நடித்த நினைவிருக்கும் வரை, ஏழையின் சிரிப்பில் போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர், புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் பஞ்சு ஆகியோரில், கிருஷ்ணன் அவர்களின் மகனாவார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நவம்பர் 23, 2016ல் காலமானார்.
திரை வாழ்க்கை
நாயகன் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியபோது, இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியதன் மூலமாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.
திரைப்பட விபரம்
இயக்குனராக
1988 | கலியுகம் |
---|---|
1989 | உத்தம புருசன் |
1990 | சத்ரியன் |
1991 | ஆயுள் கைதி |
1991 | வாக்குமூலம் |
1991 | பிரம்மா |
1992 | பங்காளி |
1994 | பவித்ரா |
1994 | பிரம்மா |
1997 | நேசம் |
1997 | அபிமன்யு |
1999 | நினைவிருக்கும் வரை |
1999 | சுயம்வரம் |
2000 | ஏழையின் சிரிப்பில் |
2000 | சபாஷ் |
2001 | லவ் மேரேஜ் |
2002 | 123 |
2005 | இன்சான் |
திரைக்கதை ஆசிரியராக
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் கே. சுபாஷ் – விக்கிப்பீடியா