நலன் குமரசாமி ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் குறும்படங்கள் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்த இவர் தோட்டா விலை என்ன?, ஒரு படம் எடுக்கணும், நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட குறிப்பிடத்தக்க குறும்படங்களை இயக்கியுள்ளார். சூது கவ்வும் எனும் முழு நீள திரைப்படத்தின் மூலம் பெரும் கவனத்தைப் பெற்றார். திரைப்படத்துறைக்கு வரும் முன்னர் இவர் நிகழ்ச்சி மேலாண்மை (Event Management) மற்றும் நிலம் விற்பனை பணிகளைச் செய்துவந்தார்.
திரைப்பட வாழ்க்கை
2012 | பீட்சா |
---|---|
2013 | தீயா வேலை செய்யணும் குமாரு (திரைப்படம்) |
2013 | சூது கவ்வும் |
2014 | ஜிகர்தண்டா |
2015 | எக்ஸ் |
2016 | காதலும் கடந்து போகும் |
2016 | மாயவன் |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் நலன் குமரசாமி – விக்கிப்பீடியா
Film Director Nalan Kumarasamy – Wikipedia