ப. நீலகண்டன் (2 அக்டோபர் 1916 – 3 செப்டம்பர் 1992) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். திரைப்படங்களுக்கு கதை, வசனங்களும் எழுதினார். இவர் 2 அக்டோபர் 1916 அன்று தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் பிறந்தார். 1947இல் இவருடைய நாம் இருவர் நாடகத்தினை அவிச்சி மெய்யப்பச் செட்டியார் திரைப்படமாக எடுத்தார். 1948இல் வேதாள உலகம் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். 1951இல் ஓர் இரவு திரைப்படத்தில் துணை இயக்குனராகப் பணியாற்றினார். இத்திரைப்படத்திற்கு வசனத்தினை கா. ந. அண்ணாதுரை எழுதினார்.
ஏஎல்எஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் அம்பிகாபதி (1957) மற்றும் திருடாதே (1961) ஆகிய இரு திரைப்படங்களை தயாரித்தார். மேலும் தமிழ், கன்னடத் திரைப்படங்கள் பலவற்றை இயக்கினார். அவற்றில் 1957 இல் சக்கரவர்த்தி திருமகள் தொடங்கி 1976இல் நீதிக்கு தலைவணங்கு முதல் எம்.ஜி.ஆரை வைத்து 17 திரைப்படங்களை இயக்கினார். இதனால் எம்.ஜி.ஆரின் ஆசுதான இயக்குனர் என்று புகழப்பட்டார்.
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் |
---|---|
1981 | தெய்வத் திருமணங்கள் |
1978 | மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் |
1976 | நீதிக்கு தலைவணங்கு |
1975 | நினைத்ததை முடிப்பவன் |
1974 | நேற்று இன்று நாளை |
1973 | உலகம் சுற்றும் வாலிபன் |
1972 | ராமன் தேடிய சீதை |
1972 | சங்கே முழங்கு |
1971 | ஒரு தாய் மக்கள் |
1971 | நீரும் நெருப்பும் |
1971 | குமரி கோட்டம் |
1970 | என் அண்ணன் |
1970 | மாட்டுக்கார வேலன் |
1968 | கணவன் |
1968 | கண்ணன் என் காதலன் |
1967 | காவல்காரன் |
1966 | அவன் பித்தனா |
1965 | ஆனந்தி |
1965 | பூமாலை |
1964 | சுஜாக்கே ரகசே |
1964 | பூம்புகார் |
1963 | கொடுத்து வைத்தவள் |
1963 | ராஜ் மகால் |
1962 | எதையும் தாங்கும் இதயம் |
1961 | நல்லவன் வாழ்வான் |
1961 | திருடாதே |
1960 | ஆடவந்த தெய்வம் |
1958 | சுனிதா |
1958 | தேடி வந்த செல்வம் |
1957 | அம்பிகாபதி |
1957 | சக்கரவர்த்தி திருமகள் |
1955 | கோமதியின் காதலன் |
1955 | மொதல தேதி |
1955 | முதல் தேதி |
1955 | நம்பேக்கா |
1954 | கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி |
1951 | ஓர் இரவு |
1949 | வாழ்க்கை |
1948 | வேதாள உலகம் |
1947 | நாம் இருவர் |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் ப. நீலகண்டன் – விக்கிப்பீடியா