பா. இரஞ்சித் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் அட்டகத்தி (2012) ஆகும். அடுத்ததாக மெட்ராஸ் எனும் படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக அடையாளம் கண்டவர் பின்னர் ரஜினிகாந்த்தை வைத்து கபாலி எனும் பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலகளவில் கவனம் பெற்றார். இவர் இயக்குநர் வெங்கட் பிரபு விடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
தொழில் வாழ்க்கை
ரஞ்சித் டிசம்பர் 8, 1982 இல் கரலபாக்கம், ஆவடி, சென்னையில் பிறந்தார். சென்னையில் உள்ள அரசு கவின் கலைகள் கல்லூரியில் பயின்றார். கல்லூரிக்குச் செல்லும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களே தனது திரைப்படங்களுக்கு உந்துதலாக இருந்ததாகத் தெரிவித்தார்.
திரைப்படங்கள்
2012 | அட்டகத்தி |
---|---|
2014 | மெட்ராஸ் |
2015 | கபாலி |
2016 | லேடிஸ் அண்ட் ஜெண்டில் உமன் |
2018 | பரியேறும் பெருமாள் |
2018 | காலா |
பரிந்துரை மற்றும் விருதுகள்
2012 | ஜெயா டிவி விருதுகள் |
---|---|
2014 | ஆனந்த விகடன் சினிமா விருதுகள் |
சிறந்த கதை | |
எடிசன் விருதுகள் | |
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் | |
தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் | |
விஜய் விருதுகள் | |
2016 | எடிசன் விருதுகள் |
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் | |
ஐபா உற்சவம் | |
2018 | ஆனந்த விகடன் சினிமா விருதுகள் |
2018 | பிகைன்ட்ஹூட்ஸ் தங்க பதக்கம் |
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா | |
எடிசன் விருதுகள் | |
தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் – விக்கிப்பீடியா