திரைப்பட இயக்குனர் பத்மாமகன் | Film Director Padmamagan

பத்மாமகன் (Padmamagan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழ் படங்களை இயக்கியுள்ளார். 2003 ஆம் ஆண்டில் பல்லவன் படத்தில் இயக்குநராக அறிமுகமான பிறகு, அம்முவாகிய நான் மற்றும் நேற்று இன்று உள்ளிட்ட படங்களை இயக்கினார்.


தொழில்


ரூஃபஸ் பார்க்கர் தயாரிப்பில் பத்மாமகன் இயக்க ஒரு வணிகத் திரைப்படத்தைத் தேர்வுசெய்தனர். அதன்படி உருவாக்கபட்ட பல்லவன் (2003) படம் சிறிய விளம்பரத்துடன் வெளியிடப்பட்டது. மேலும் இது வணிக ரீதியாக சிறப்பான வெற்றியைப் பெறவில்லை. பார்க்கருடன், இவரும் அம்முவாகிய நான் (2007) படத்தின் பணியைத் தொடங்கினார், இதில் ஒரு பாலியல் தொழிலாளி இல்லத்தரசியாக மாறும் கதையைச் சொன்னார். பார்த்திபன், பாரதி ஆகியோர் நடித்த இந்த திரைப்படம் “எழுத்தாளர்-இயக்குநர் பத்மா மகன் தமிழ் திரைப்படத்துறையை எதிர்காலத்தில் நன்கு வளர்க்கும் திரைப்படத்துடன் வந்துள்ளார்” என்று நேர்மறையான விமர்சனங்களுடன் வெளியானது. இந்த படம் பின்னர் 2007 ஆம் ஆண்டு கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இது நாயகன் (1987) க்குப் பிறகு இதுபோன்ற ஒரு சாதனையை நிகழ்த்திய முதல் தமிழ் படமாகும். படம் வெற்றிகண்டபோதும், பத்மகன் தான் அடுத்து எடுக்க திட்டமிட்ட படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. அக்கதையானது ஏழு வயது குழந்தையின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. தயாரிப்பாளரை ஈர்ப்பதில் ஏற்பட்ட தோல்வியானது, இவரை திரைப்படத் தொழிலை கைவிடச் செய்து. இவரை ஒரு குடிகாரனாகவும் மாற்றியது என்பதை இவரே குறிப்பிட்டார்.


2012 ஆம் ஆண்டில், இவர் தனது மூன்றாவது படமான நேற்று இன்று படத்தில் விமல், பிரசன்னா ரிச்சர்டு ஆகியோரின் நடிப்பில் உருவாக்கினார். இவர் தனது மனைவி மாலதியுடன் சேர்ந்து இந்த படத்தைத் தயாரித்தார், மேலும் இது சமூக ரீதியாக பொருத்தமான திரைப்படமாக இருக்கும் என்று கருதினார். பல தாமதங்களுக்குப் பிறகு இந்த படம் 2014 இல் குறைந்த திரையரங்குகளில் வெளியானது. 2015 ஆம் ஆண்டில், மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்கிய பூமி என்ற படத்தின் பணியை இவர் தொடங்கினார்,


திரைப்படவியல்


 • ஸ்டைல் (2002) (உரையாடல்)
 • 2003 பல்லவன்
  2007 அம்முவாகிய நான்
  2014 நேற்று இன்று

  வெளி இணைப்புகள்

  திரைப்பட இயக்குனர் பத்மாமகன் – விக்கிப்பீடியா

  Film Director Padmamagan – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *