திரைப்பட இயக்குனர் சக்தி சிதம்பரம் | Film Director Sakthi Chidambaram

சக்தி சிதம்பரம் இந்திய தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் லவ்லி, சார்லி சாப்ளின், இங்கிலிஸ்காரன் உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்கம் மட்டுமின்றி திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். இவரது இயற்பெயர் சி. தினகரன் ஆகும்.


திரையுலக வாழ்க்கை


இவர், கோட்டை வாசல், போக்கிரி தம்பி, பதவி பிரமாணம், வீட்டை பாரு நாட்டை பாரு உழியன். உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். 1997இல் பாசிகர் என்னும் இந்தி திரைப்படத்தின் மறுஆக்கமான சாம்ராட் திரைப்படத்தை ராம்கியை வைத்து இயக்கியதன் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 1989இல் மன்சூர் அலி கான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு திரைப்படத்தை இயக்கினார். இந்த இரண்டு திரைப்படங்களுமே தோல்வியைச் சந்தித்த திரைப்படங்களாகும்.


சிறிது இடைவெளிக்குப் பிறகு தனது பெயரை மாற்றிக் கொண்டு என்னம்மா கண்ணு என்னும் சத்யராஜ் நடித்த திரைப்படத்தை இயக்கினார். இது ஒரு வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் மிஸ்டர் நாரதர் என்னும் திரைப்படத்தில் இணைய திட்டமிட்டனர். ஆனால் இப்படம் கைவிடப்பட்டது. பின்னர் கார்த்திக் நடித்த லவ்லி திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தைத் தொடர்ந்து, பிரபுவும், பிரபுதேவாவும் இணைந்து நடித்த சார்லி சாப்ளின் திரைப்படத்தை இயக்கினார். இது ஒரு சிறந்த வெற்றித் திரைப்படமாக அமைந்தது. தமிழில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இப்படம் இதர இந்திய மொழிகளில் மறுஆக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இனிது இனிது காதல் இனிது, காதல் கிறுக்கன் திரைப்படங்களை இயக்கினார். இவ்விரு திரைப்படங்களும் வணிக ரீதியாக வெற்றியைப் பெறவில்லை.


சத்யராஜ் உடன் மீண்டும் இணைந்து இங்கிலிஸ்காரன், கோவை பிரதர்ஸ் திரைப்படங்களை இயக்கினார். இவ்விரு திரைப்படங்களும் சிறப்பான வெற்றியைப் பெற்றன.


திரைப்பட விபரம்


இயக்கிய திரைப்படங்கள்

1997 சாம்ராட்
2000 என்னம்மா கண்ணு
2001 லவ்லி
2002 சார்லி சாப்ளின்
2003 காதல் கிறுக்கன்
2003 இனிது இனிது காதல் இனிது
2004 மகா நடிகன்
2005 இங்கிலிஸ்காரன்
2006 கோவை பிரதர்ஸ்
2007 வியாபாரி
2008 சண்டை
2009 ராஜாதி ராஜா
2010 குரு சிஷ்யன்
2015 ஜெயிக்கிற குதிரை
2015 மச்சான்

நடித்த திரைப்படங்கள்

1999 ஜோடி
2007 வியாபாரி
2013 தில்லுமுல்லு
2015 மச்சான்

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் சக்தி சிதம்பரம் – விக்கிப்பீடியா

Film Director Sakthi Chidambaram – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *