திரைப்பட இயக்குனர் சஞ்சய் ராம் | Film Director Sanjay Ram

சஞ்சயு ராம் (Sanjay Ram) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் பணியாற்றியவர். இவர் 2000 களின் பிற்பகுதியில் தீவிரமாக பணியாற்றினார். இவரது திரைப்பட வாழ்க்கை முழுவதும், திரையரங்கில் வெளியீட இயலாமல் போன பல படங்களில் பணியாற்றினார். மேலும், இவரது பல திரைப்படங்கள் வன்முறையை உள்ளடக்கமாக கொண்டவையாகவும், அதிகப்படியான இரத்தக்களரி கொண்டதனால் விமர்சிக்கப்பட்டன.


தொழில்


ஸ்ரீ (2002), அன்பே அன்பே (2003) ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதி சஞ்சய் ராம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். சஞ்சய் ராம் 2006 இல் கிராமிய அதிரடி படங்கள் இரண்டில் பணியாற்றினார். அவை நடன இயக்குனர் ஹரிகுமார் நடித்த தூத்துக்குடி மற்றும் புதுமுகங்களைக் கொண்ட ஆடு புலி ஆட்டம் ஆகியவை ஆகும். தூத்துக்குடி நேர்மறையான விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாக ஆச்சரியமான வெற்றியைப் பெற்றது. பின்னர் இவர் சரவணன் முதன்மை வேடத்தில் நடித்த வீரமும் ஈரமும் (2007) மற்றும் இயக்கம் (2008), ஆகிய படங்களை உருவாக்கினார். 2008 ஆம் ஆண்டில், சஞ்சய் ராம் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட சிவமயம் என்ற கதையில் பணியாற்றினார், இதில் ஷாம், மேகா நாயர், ஸ்ரீதேவிகா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். சென்னையிலும், கோயம்புத்தூரிலும் படப்பிடிப்பு தொடங்கி நடத்தப்பட்டு பாடல் பதிவு செய்யப்பட்டாலும், படம் திரையரங்குகளில் வெளிவரவில்லை. மேலும், அஜய் கிருஷ்ணா மற்றும் சஞ்சிதா ஷெட்டி நடித்து இவர் பணியாற்றிய சுர்லா என்ற மற்றொரு படமும் திரையரங்குகளில் வெளிவர இயலாமல் போனது. மம்மூட்டி, சரத்குமார் ஆகியோர் நடிப்பில் லிங்கம் என்ற படத்தையும் இவர் அறிவித்தார், ஆனால் இந்த படம் தயாரிக்கப்படவில்லை. சஞ்சய் ராம் 2008 ஆம் ஆண்டில் உதயா மற்றும் ஷிரின் ஆகியோருடன் பூவா தலையா என்ற படத்தில் பணிபுரிந்தார், ஆனால் இப்படம் தயாரிப்பு சிக்கல்களில் மாட்டியது. 2011 ஆம் ஆண்டில் படம் வெளியிடத் தயாராகி வந்த நிலையில், சஞ்சய் ராம் தனது பகுதிகளை முடிக்காமல் படத்தை வெளியிட முயற்சிப்பதாக ஷிரின் நாடிகர் சங்கத்திடம் புகார் கூறினார். இந்த படம் 2011 இல் குறைந்த அரங்குகளில் வெளிவந்தது.


சஞ்சய் ராமின் அடுத்த வெளியீடாக சத்யராஜ், விக்னேஷ் ஆகியோர் நடித்த கௌரவர்கள் (2010) என்ற குடும்ப நாடகப் படமானது பத்துபேர் கூட்டாக இணைந்து தயாரித்தது ஆகும். சஞ்சய் ராம் அடுத்ததாக சரத்குமாருடன் சேது சமுத்திரம் என்ற திரைப்படத்தில் பணியாற்றினார். ஆனால் பின்னர் படத் தயாரிப்பு கைவிடப்பட்டது. பின்னர் புகார் கூறினார்.கருவறை குற்றங்கள் என்ற படத்தை அஜய் கிருஷ்ணா, வாலி ஆகியோருடன் இவரும் இணைந்து நடிப்பதாக பல நாயகர்கள் நடிக்கும் குற்றக் குழு தலைவர்கள் பற்றிய படமாக பணியாற்றத் தொடங்கினார். ஆனால் படத்தின் தயாரிப்புப் பணி முடியவில்லை. அதேபோல் அஜய் கிருஷ்ணா நடித்த மீன்கொத்தி என்ற மற்றொரு படமும் இதேபோல் முழுமையடையடையவில்லை. 2012 ஆம் ஆண்டில், புகார் கூறினார்.குற்றாலம் என்ற நகைச்சுவை நாடகத் திரைப்படத்திற்கான வேலைகளைத் தொடங்கினார், பின்னர் இப்படத்திற்கு ரோசா என பெயர் மாற்றப்பட்டது. இப்படத்தில் நீலி கார்த்திகாவுடன் வாலியும் இவரும் முக்கிய வேடங்களில் நடித்தனர், ஆனால் இந்த படமும் திரையரங்குகளில் வெளிவர இயலாமல் போனது.


2013 ஆம் ஆண்டில், இவர் தனது முந்தைய படத்தின் தொடர்ச்சியாக கிளியந்தட்டு: தூத்துக்குடி 2 என்ற பெயரில் ஒரு படத்தைத் தொடங்கினார். படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நடந்தபோதிலும், படம் திரையரங்குகளுக்கு வரவில்லை.


திரைப்படவியல்

2006 தூத்துக்குடி
2006 ஆடு புலி ஆட்டம்
2007 வீரமும் ஈரமும்
2008 இயக்கம்
2010 கௌரவர்கள்
2011 பூவா தலையா

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் சஞ்சய் ராம் – விக்கிப்பீடியா

Film Director Sanjay Ram – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *