திரைப்பட இயக்குனர் ஷாஜி கைலாஸ் | Film Director Shaji Kailas

சாஜி கைலாஸ் (Shaji Kailas) மலையாளத் திரப்ப்டங்களில் பணியாற்றிய ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். 1990களின் அவரது திரைப்படங்களுக்காக அவர் மிகவும் பிரபலமானவர். டாக்டர் பசுபதி (1990) என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் சாஜி இயக்குநராக அறிமுகமானார். அவர் திரைக்கதை எழுத்தாளர்களான ரென்ஜி பணிக்கர் மற்றும் ரஞ்சித் உடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். 1992இல் வெளியான அரசியல் படமான தலஸ்தானம் , ஸ்தலஸ்தே பிரதான பையான்ஸ் (1993) ஏகலைவன், மாஃபியா (1993), கமிசனர் (1994) மற்றும் த கிங் போன்ற என்ற பிரபல அரசியல் படங்களில் ரென்ஜி பணிக்கருடன், சாஜி பணியாற்றினார். மேலும் இவர் ரஞ்சித்துடன் இணைந்து ஆறாம் தம்புரான் (1997), நரசிம்ஹம் (2000) மற்றும் வாளேட்டன் (2000) போன்ற நிலப்பிரபுத்துவ பின்னணி கொண்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.


தொழில்


ஆரம்ப ஆண்டுகளில்


1984 ஆம் ஆண்டு புகழ்பெற்ற எழுத்தாளர் பாலு கிளியாத்தின் கீழ் சாஜி கைலாஸ் உதவி இயக்குனராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். ஜகதீஷ் எழுதி சுரேஷ் கோபி முன்னணி பாத்திரத்தில் நடித்து 1989 இல் வெளிவந்த நியூஸ் என்ற படத்தின் மூலம் சாஜி கைலாஸ் ஒரு இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில், சாஜி திரைப்பட பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனால் அவரது இரண்டாவது வெளியீடு சன்டே 7 பி.எம் 1990 ல் வெளியானது, இது ஒரு பெரிய தோல்விப் படமாகும். பின்னர் அதே ஆண்டில் அவர் இயக்கிய டாக்டர் பசுபதி ஒரு அரசியல் நையாண்டி மற்றும் இன்னொசென்ட் கதாபாத்திரம் ஆகும். பின்னர் சாஜி கைலாஸ் அதிரடி திரைப்படங்களுக்கு மாறினார்.


1992-2000


1992 ஆம் ஆண்டில் சாஜி கைலாஸ் தனது முதல் வெற்றியை ரென்ஜி பணிக்கருடன் இணைந்து தலாஸ்தானம் மூலம் பெற்றார். இதில் சுரேஷ் கோபி முன்னணி பாத்திரத்தில் நடித்திருந்தார். மாணவர் அரசியலைப் பற்றி இப்படம் பேசியது குறித்தது. படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி கே . சந்திரன் இந்தத் திரைப்படம் நரேந்திர பிரசாத்திற்கு திருப்பு முனையைத் தந்தது, பின்னர் இவர் மலையாள திரைப்படத்துறையில் மிகவும் பாராட்டப்பட்ட வில்லனாகவும் ஆனார்.


அண்மையில் ரஞ்சித் மற்றும் ரென்ஜி பணிக்கர் ஆகியோரின் கதையில் மோகன்லால் மற்றும் மம்மூட்டி ஆகியோரின் நடிப்பில் ஒரு படம் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அது பின்னர் கை விடப்பட்டது.


தனிப்பட்ட வாழ்க்கை


1965 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, பொதுப்பணித்துறை பொறியியலாளராக பணியாற்றிய சிவராஜன் நாயருக்கு சாஜி பிறந்தார். 1996 ஜூன் 1 அன்று தனது நெருங்கிய நண்பர் இல்லத்தில் சுரேஷ் கோபி மற்றும் தனது சில நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் ஆனி என்பவரைத் சாஜி கைலாஸ் திருமணம் செய்து கொண்டார். அன்னி பின்னர் சித்ரா என்ற பெயரை மாற்றிக் கொண்டார். அவர் ருத்ராட்சம் என்ற படத்தில் நடித்திருந்தார். அவர்கள் தற்போது திருவனந்தபுரத்தில் வசிக்கின்றனர், மேலும் இத்தம்பதிகள் ஜகன்னாதன், சரானா மற்றும் ரோசன் என்ற மூன்று மகன்களை கொண்டிருக்கிறார்கள்.


விருதுகள்


பிலிம்பேர் விருது


 • 1993: சிறந்த இயக்குனர் மலையாளம் – ஏகலைவன்

 • ஆசியத் திரைப்பட விருதுகள்


 • 2000: சிறந்த இயக்குநர் விருது – நரசிம்ஹம்

 • 2000: சிறந்த திரைப்பட விருது – நரசிம்ஹம்
 • வெளி இணைப்புகள்

  திரைப்பட இயக்குனர் ஷாஜி கைலாஸ் – விக்கிப்பீடியா

  Film Director Shaji Kailas – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *