சாரதா இராமநாதன் (Saradha Ramanathan) ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், கலாச்சார சிந்தனையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அறிமுக இயக்குனரானராக இயக்கி 2007 வெளிவந்த தமிழ் திரைப்படமான சிருங்காரம் திரைப்படம் மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. அவரது இரண்டாவது படம் புதிய திருப்பங்கள் 2014 இல், இந்தியாவின் சிறந்த நடனம், திரைப்பட தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இந்திய பாரம்பரிய நடனமாடும் கலைஞர்கள் பற்றி கூறும் நாட்டியனுபவா என்ற ஒரு ஆவணப்படத்தை இயக்கியுள்ளார்.
தொழில்
திரைப்படங்களில் நுழைவதற்கு முன்னர், சாரதா இராமநாதன் ஊடகம் மற்றும் கலாச்சார துறைகளில் பணிபுரிந்து வந்தார். அவர் ஸ்பிக் மேக்காய் மற்றும் க்ரை போன்ற சமூக மற்றும் கலாச்சார இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். இந்தியாவில் சிறந்த கலைகளை ஊக்குவிப்பதற்காக கலைஞர்களுக்கான இந்திய அறக்கட்டளை அமைப்பதில் அவர் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தார். ஃபோர்டு ஃபவுண்டேசனின் திட்ட அலுவலராகவும் அவர் இருந்தார். 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்த ஒரு தேவதாசியின் வாழ்க்கையை விவரிக்கும் சிருங்காரம் (2007) இவரது முதல் திரைப்படமாகும், பல்வேறு திரைப்பட திருவிழாக்களில் திரையிடப்பட்ட பிறகு, இந்த படம் 2007 ஆம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு மூன்று தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றது. படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. அவர் 54 வது தேசிய திரைப்பட விருதுகளில் ஜூரி உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். குழந்தை கடத்தலுடன் தொடர்புடைய தனது இரண்டாவது படமான புதிய திருப்பங்கள் 2016 அக்டோபர் 30 அன்று வெளிவந்தது.2014 ஆம் ஆண்டில் பொது சேவை ஒளிபரப்பு அறக்கட்டளையால் தயாரிக்கப்பட்ட படம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்ட சாரதாவின் மூன்றாவது திட்டமான நாட்டியனுபவா இந்திய பாரம்பரிய நடனத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆவணப்படம் ஆகும்..
மற்ற படைப்புகள்
அவரது திரைப்பட வாழ்க்கையைத் தவிர, சாரதா பத்திரிகையாளராக பணியாற்றினார். யுனைட்டெட் நேஷன்ஸ் டெவலப்மென்ட் புரோகிராம் மற்றும் யுனெஸ்கோ ஆகியவற்றுடன் இவர் இணைந்து பணியாற்றி வருகிறார். மேலும் இந்திய தேசியத் திரைப்பட விருதுகள், ஐ.எஃப்.எஃப்.ஐ. கோவா மற்றும் சர்வதேச மகாவ் திரைப்பட விழா போன்ற பல சர்வதேச திரைப்படம் சார்ந்த விழாக்களில் இவர் பணியாற்றி வருகிறார்.
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் சாரதா ராமநாதன் – விக்கிப்பீடியா
Film Director Sharada Ramanathan – Wikipedia