சிவா தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். சிறுத்தை திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்றமையால் சிறுத்தை சிவா என்றும் பரவலாக அறியப்படுகிறார். அஜித் குமார் நடிப்பில் இவர் இயக்கிய வீரம் திரைப்படமும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. பின்னர் இவர் மீண்டும் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து பணியாற்றிய வேதாளம் திரைப்படமானது, 2015 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியானது. மூன்றாவது முறையாக அஜித்குமார் மற்றும் சிவா கூட்டணியில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான விவேகம் திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றபோதிலும் நல்ல வருவாய் ஈட்டியது.
திரைப்பட விபரம்
இயக்கிய திரைப்படங்கள்
2008 | சவுர்யம் |
---|---|
2009 | சங்கம் |
2011 | சிறுத்தை |
2012 | தராவு |
2014 | வீரம் |
2015 | வேதாளம் |
2017 | விவேகம் |
2018 | விசுவாசம் |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் சிவா – விக்கிப்பீடியா
Film Director Siva – Wikipedia