நாராயணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தனது திரைப் பெயரான சிவச்சந்திரன் (Sivachandran) என்பதன் மூலம் சிறப்பாக அறியப்படுகிறார். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், இயக்குநர், எழுத்தாளர் ஆவார்.
தொழில்
சிவச்சந்திரன் பட்டினப்பிரவேசம் (1977) திரைப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக அறிமுகமானார். பின்னர் அன்னபூரணி (1978) படத்தில் ஆர். முத்துராமனுடன் எதிர்மறை வேடத்தில் நடித்தார். அவள் அப்படித்தான் (1978) மற்றும் பொல்லாதவன் (1980) உள்ளிட்ட குறிப்பிடத்தக்க படங்களில் நடித்தார். என் உயிர் கண்ணம்மா (1988) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் , பிரபுவின் பல படங்களை இயக்கியுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
நாராயணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் சிவச்சந்திரன் என்று பெயரை மாற்றி தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த திரைப் பெயரானது சிவாஜி கணேசனிடமிருந்து “சிவா”வையும் எம். ஜி. ராமச்சந்திரனிடமிருந்து “சந்திரன்” என்பதையும் இணைத்து உருவாக்கபட்டதாகும்.
என் உயிர் கண்ணம்மா (1988) படத்தின் படப்பிடிப்பின்போது நடிகை லட்சுமியை காதலித்தார். அவர்கள் இருவரும் 1987 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர் மீண்டும் இயக்கிய இரத்த தானம் (1988), ஜோடி சேந்தாச்சு (1992) ஆகிய படங்களில் மீண்டும் லட்சுமியுடன் சேர்ந்து பணியாற்றினார். சிவச்சந்திரனும் லட்சுமியும் 2000 ஆம் ஆண்டில் சம்யுக்தா என்ற பெண்ணை தத்தெடுத்தனர்.
திரைப்படவியல்
நடிகராக
1976 | இது இவர்களின் கதை |
---|---|
1977 | பட்டினப்பிரவேசம் |
1978 | அவள் அப்படித்தான் |
அன்னபூரணி | |
1979 | ரோசாப்பூ ரவிக்கைக்காரி |
பஞ்ச கல்யாணி | |
நீ சிரித்தால் நான் சிரிப்பேன் | |
1980 | துணிவே தோழன் |
மங்கல நாயகி | |
நட்சத்திரம் | |
சௌந்தர்யமே வருக வருக | |
வண்டிச்சக்கரம் | |
பொல்லாதவன் | |
1981 | ராம் லட்சுமண் |
ராணித்தேனீ | |
நெல்லிக்கனி | |
நெஞ்சில் ஒரு முள் | |
1982 | ஆனந்த ராகம் |
பார்வையின் மறுபக்கம் | |
கடவுளுக்கு ஒரு கடிதம் | |
அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை | |
சிம்லா ஸ்பெஷல் | |
1983 | வெள்ளை ரோஜா |
சிவப்பு சூரியன் | |
தண்டிக்கப்பட்ட நியாயங்கள் | |
1984 | ராஜதந்திரம் |
அன்பே ஓடிவா | |
எழுதாத சட்டங்கள் | |
அந்த ஜூன் பதினாறாம் நாள் | |
அந்த உறவுக்கு சாட்சி | |
ஓ மானே மானே | |
நாளை உனது நாள் | |
வம்ச விளக்கு | |
1985 | நவக்கிரக நாயகி |
நாம் இருவர் | |
நீதியின் நிழல் | |
தென்றல் தொடாத மலர் | |
1986 | டிசம்பர் பூக்கள் |
பொய் முகங்கள் | |
முரட்டு கரங்கள் | |
ஒரு இனிய உதயம் | |
1987 | கடமை கண்ணியம் கட்டுப்பாடு |
மங்கை ஒரு கங்கை | |
ஆனந்த் | |
1988 | என் உயிர் கண்ணம்மா |
இரத்த தானம் | |
1990 | நியாயங்கள் ஜெயிக்கட்டும் |
1992 | ஜோடி சேந்தாச்சு |
1995 | கட்டுமரக்காரன் |
இயக்குநராக
கதை எழுத்தாளராக
உரையாடல் எழுத்தாளராக
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் சிவசந்திரன் – விக்கிப்பீடியா