செளந்தர்யா ரஜினிகாந்த் (இயற்பெயர்: சக்கு பாய் ராவ் கெய்க்வாட். பிறப்பு: 20 செப்டம்பர் 1984) முதன்மையாக தமிழ் சினிமாவில் பணியாற்றும் வரைகலை வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் ஆக்கர் பிக்சர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஆவார். ஒரு வரைகலை வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய செளந்தர்யா, அவரது தந்தை ரஜினிகாந்த் நடித்த படங்களில் தலைப்புக் காட்சிகளை வடிவமைக்கத் தொடங்கினார். அவர் கோவா திரைப்படத்தின் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனார். ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தில் ஒரு இயக்குனராக அறிமுகமானார்.
திரைப்படங்கள்
வரைகலை வடிவமைப்பு
வருடம் | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
1999 | படையப்பா | தலைப்பு மட்டும் |
2002 | பாபா | தலைப்பு மட்டும் |
2005 | அன்பே ஆருயிரே | |
சந்திரமுகி | தலைப்பு மட்டும் | |
2006 | சிவகாசி | |
2007 | சென்னை 600028 | |
சிவாஜி | தலைப்பு மட்டும் | |
2014 | கோச்சடையான் | இயக்கமும் |
தயாரிப்பு
2010 | கோவா |
---|
இயக்கம்
2014 | கோச்சடையான் |
---|
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் – விக்கிப்பீடியா
Film Director Soundarya Rajinikanth – Wikipedia