திரைப்பட இயக்குனர் சுதா கொங்கரா | Film Director Sudha Kongara

சுதா கொங்கரா (Sudha Kongara) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட பெண் இயக்குநராவார். திரைக்கதை ஆசிரியராக தமிழ் திரையுலகிலும், தெலுங்கு திரைத்துறையிலும், இந்தித் திரைப்பட உலகிலும் நன்கு அறியப்பட்டவர். இவர் அமைத்த திரைக்கதை இந்திய ஆங்கிலப் படமான மித்ர், மை ஃபிரண்ட் ( Mitr, My Friend) அந்த ஆண்டின் சிறந்த ஆங்கிலப் படத்திற்கான விருதாக 49ஆவது தேசியத் திரைப்பட விருதைப் பெற்றது.. இவர் துணை இயக்குநராக ஏழு ஆண்டுகள் மணிரத்தினத்திடம் பணியாற்றியவர். 2016 ஆம் ஆண்டில் இவர் இந்தி திரையுலகில் சாலா காதூர்ஸ் திரைப்படத்தின் வழியாக நுழைந்தார்.


வாழ்க்கை


சுதா கொங்கரா ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினத்தில் பிறந்தவர். அங்கேயே தன் பள்ளிப்படிப்பை முடித்தவர். இவர் வரலாறு மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் படிப்பை நாகர்கோயிலில் மகளிர் கிருத்துவக் கல்லூரியில் பயின்றவர்.


பணிகள்


இவர் முதன் முதலில் இயக்கிய தமிழ்த் திரைப்படம் துரோகி (2010) ஆகும். இதன் பிறகு இவர் குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட திரைப்படத்திற்கான கதையை 2013 ஆண்டில் எழுதி, நடிகர் மாதவனிடம் கதையைச் சொன்னார். இக்கதையால் கவரப்பட்ட மாதவன் இந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் படத்தயாரிப்புக்கும் உதவி செய்து படத்தை உயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்ல உதவினார். இந்தப் படம்தான் இறுதிச்சுற்று. .


திரைப்படங்கள்

2010 துரோகி
2016 இறுதிச்சுற்று
2020 சூரரைப் போற்று

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் சுதா கொங்கரா – விக்கிப்பீடியா

Film Director Sudha Kongara – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *