சுந்தர் சி (ஆங்கில மொழி: Sundar C, பிறப்பு: 21 சனவரி 1968) தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நடிகருமாவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர், தமிழில் 24 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தலைநகரம் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்ப காலத்தில், மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்த இவர் முறை மாமன் என்ற நகைச்சுவைத் திரைப்படம் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார். இவருடைய பல படங்களில் கதாநாயகியின் பெயர் இந்து என்பதாகும். உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் ஆகிய திரைப்படங்கள் இவருடைய இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன. மேட்டுக்குடி, வின்னர், நாம் இருவர் நமக்கு இருவர், லண்டன், கலகலப்பு போன்றவை இவர் இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படங்கள் ஆகும்.
திரைப்படத்துறை
இயக்குநர்
1995-ம் ஆண்டு முறை மாமன் திரைப்படம் மூலமாக சுந்தர் சி. அறிமுகமானார், அதன்பிறகு முறை மாப்பிள்ளை, என்ற அருண் விஜய்யுடைய முதல் படத்தை இயக்கினார். ரஜினிகாந்த்டைய அருணாச்சலம், கமல்ஹாசனுடைய அன்பே சிவம் மட்டுமின்றி நடிகர்கள் கார்த்திக், பிரசாந்த், அர்ஜூன், சரத்குமார், மற்றும் அஜித்குமார் ஆகியோருடைய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
நடிகர்
2006-ம் ஆண்டு தன்னுடைய இயக்குநர் பணியை விடுத்து, தலை நகரம் திரைப்படம் மூலமாக நடிகரானார். ஆரம்பத்தில் சரியாக போகாவிட்டாலும், பின்னர் இத்திரைப்படம் மிகப் பெரும் வெற்றியடைந்தது. 2007-ம் ஆண்டு வெளிவந்த வீராப்பு திரைப்படமும் 2008-ம் ஆண்டு சக்தி சிதம்பரத்தின் நடிப்பில் வெளியான சண்டை திரைப்படமும் வெற்றி அடைந்தன. அயினும் அதனைத் தொடர்ந்து வெளியான திரைப்படங்களான ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ உள்ளிட்டவைகள் ஓரளவே ஓட ஐந்தாம் படை, குரு சிஷ்யன், வாடா, நகரம் உள்ளிட்டவை படுதோல்வியைத் தழுவின. தற்போது இவர் நடிக்கும் திரைப்படமான முரட்டுக் காளை ஏற்கனவே 1980-களில் வெளியான திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.
சின்னத்திரை அறிமுகம்
2017-ம் ஆண்டில், தென்னிந்திய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் “நந்தினி” என்று தொடர் அவரின் மனைவி குஷ்பு அவர்களோடு இணைந்து தயாரித்தார்.
திரைப்படங்கள்
நடிகராக
ஆண்டு | திரைப்படம் |
---|---|
1995 | முறை மாமன் |
1997 | அருணாச்சலம் |
2006 | தலை நகரம் |
2007 | வீராப்பு |
2008 | சண்டை |
2008 | ஆயுதம் செய்வோம் |
2009 | பெருமாள் |
2009 | தீ |
2009 | ஐந்தாம் படை |
2010 | குரு சிஷ்யன் |
2010 | வாடா |
2010 | நகரம் மறுபக்கம் |
2011 | முரட்டு காளை |
இயக்குநராக
ஆண்டு | திரைப்படம் |
---|---|
2014 | அரண்மனை |
2013 | கலகலப்பு – 2 |
2013 | மத கஜ ராஜா |
2012 | கலகலப்பு |
2010 | நகரம் மறுபக்கம் |
2006 | ரெண்டு |
2005 | லண்டன் |
2005 | சின்னா |
2005 | தக திமி தா |
2004 | கிரி |
2003 | வின்னர் |
2003 | அன்பே சிவம் |
2002 | அழகான நாட்கள் |
2001 | ரிஷி |
2001 | உள்ளம் கொள்ளை போகுதே |
2000 | கண்ணன் வருவான் |
2000 | உன்னைக் கண் தேடுதே |
2000 | அழகர்சாமி |
1999 | உனக்காக எல்லாம் உனக்காக |
1999 | உன்னைத் தேடி |
1999 | சுயம்வரம் |
1998 | நாம் இருவர் நமக்கு இருவர் |
1997 | அருணாச்சலம் |
1997 | ஜானகிராமன் |
1996 | மேட்டுக்குடி |
1996 | உள்ளத்தை அள்ளித்தா |
1995 | முறை மாமன் |
1995 | முறை மாப்பிள்ளை |
பாடகராக
ஆண்டு | திரைப்படம் |
---|---|
2010 | குரு சிஷ்யன் |
2008 | சண்டை |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் சுந்தர் சி. – விக்கிப்பீடியா