திரைப்பட இயக்குனர் டி. சி. வடிவேலு நாயகர் | Film Director T.C. Vadivelu Nayakar

டி. சி. வடிவேலு நாயகர் (T.C. Vadivelu Nayakar) என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். முதல் தமிழ் பேசும் படத்தின் இயக்குனரும் கதை, வசனம், திரைக்கதை, பாடல்கள்,கலை இயக்கம் (ART DIRECTION) , மற்றும் இயக்கம் ஆகிய பல்வேறு பணிகளை தமிழ் சினிமா பேசும்படக் காலத்தில் முதல் 2 பத்தாண்டுகளில் பங்காற்றியிருக்கிறார். துவக்கம் முதல் தொடர்ச்சியாக பணிபுரிந்திருகிறார்


ஏராளமான கலைஞர்களை அறிமுகப்படுத்தியும், வாய்ப்புகள் கொடுத்தும் வளர்த்திருக்கிறார். இவர் பங்காற்றிய அளவுக்கு பரவலாக இவருடைய பெயரும், புகழும் அறியப்படவில்லை. பல விடுபடல்கள், தவறான தகவல்கள் போன்றவற்றால் வடிவேலு நாயகரின் பங்களிப்புக்கு குந்தகம் விளைந்திருக்கிறது


இயக்கிய திரைப்படங்கள்


 • காலவரிஷி – 1932- இயக்கம் –(சர்வோத்தம் பதாமியுடன் இணைந்து).

 • ஹரிச்சந்திரா- 1932- இயக்கம் –(சர்வோத்தம் பதாமியுடன் இணைந்து).

 • பிரஹலாதன் – 1933-எழுத்து, இயக்கம் (டெக்னிகல் டைரக்டர்- காளிப்ரசாத் கோஷ்)

 • சக்குபாய் – 1934 –வசனம், பாடல்கள்

 • ரத்னாவளி – 1935 – திரைக்கதை, வசனம் ( இயக்கம் A. நாராயணனுடன் இணைந்து)

 • பட்டினத்தார் – 1936 – திரைக்கதை, வசனம் , இயக்கம்

 • மீராபாய் – திரைக்கதை,வசனம், இயக்கம் ( இயக்கம் A. நாராயணனுடன் இணைந்து)

 • விராட பருவம் – ( இயக்கம் A. நாராயணனுடன் இணைந்து)

 • விஸ்வாமித்ரா – 1936 –கதை

 • கவிரத்ன காளிதாஸ் – 1937 – இயக்கம்

 • ஸ்ரீ கிருஷ்ண துலாபாரம் – 1937 -வசனம்

 • விக்ரம ஸ்ரீ சாகசம் & நவீன ஸ்ரீ சாகசம் – 1937 – இயக்கம்

 • பிரகலாதா – 1939 – திரைக்கதை

 • ரம்பையின் காதல் – 1939 – வசனம், (இயக்கம் B.N.ராவ் அவர்களுடன் இணைந்து)

 • சதி முரளி – 1940 – கதை, வசனம், கலை இயக்கம் & இணை இயக்கம்

 • சாவித்ரி- 1941 வசனம்

 • ஆர்யமாலா -1941-வசனம்

 • ஹரிச்சந்திரா 1944- வசனம்

 • ஜகதலப்ரதாபன் – 1944 – வசனம்

 • புலந்திரன் – 1946 கதை,திரைக்கதை, வசனம். (இயக்கம்- ராமகிருஷ்ணனுடன் இணைந்து)

 • துளசி ஜலந்தர்- 1947 –கதை, வசனம்

 • வெளி இணைப்புகள்

  திரைப்பட இயக்குனர் டி. சி. வடிவேலு நாயகர் – விக்கிப்பீடியா

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *