திரைப்பட இயக்குனர் தக்காளி சீனிவாசன் | Film Director Thakkali Srinivasan

தக்காளி சீனிவாசன் (Thakkali Srinivasan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், இசைக்கலைஞர், தயாரிப்பாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார். இவரது படங்கள் பெரும்பாலும் திகில் அல்லது கொலை மர்ம கதைக்களங்களை உள்ளடக்கியது.


தொழில்


தக்காளி சீனிவாசன் தயாரிப்பாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். வேலு பிரபாகரன் இயக்கிய அறிவியல் புனைகதை திரைப்படமான நாளை மனிதன் (1989) என்ற படத்தை தயாரித்தார். அப்படமானது வெற்றி பெற்றது. தாளை மனிதனின் அடுத்த பாகமாக அதிசய மனிதன் (1990) என்ற படத்தை வேறு நடிகர்களைக் கொண்டு தயாரித்தார். ஆனால் படம் வணிக ரீதியாக சிறப்பாக வரவில்லை. பிரேமியுடன் சேர்ந்து, பிரேமி-சீனி என்ற பெயரில் இரட்டையராக இவர் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதைத் தொடர்ந்து, 1990 களில் இரண்டு படங்களை இயக்கியுள்ளார். அவை நாசரைக் கொண்டு திகில் படமான ஜென்ம நட்சத்திரம் (1991) மற்றும் ரகுவரனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மர்ம கொலை படமான விட்னஸ் (1995) போன்றவை ஆகும். 1990 களின் பிற்பகுதியில் பாண்டியராஜன் நடிக்க மாறுவேடம் என்ற பெயரில் படத் தயாரிப்புப் பணியைத் தொடங்கினார், ஆனால் பின்னர் படப்பணிகள் நிறுத்தப்பட்டன.


2001 ஆம் ஆண்டில், இவர் லிவிங்ஸ்டன், ஸ்ரீமன், ரியாஸ் கான் ஆகியோரைக் கொண்டு மற்றொரு கொலை மர்மப் படமான அசோக வனம் என்ற படத்தை தயாரித்தார். அப்படமானது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தி இந்து நாட்டைச் சேர்ந்த ஒரு விமர்சகர், “முதல் பாதியில் திரைக்கதை நன்றாக இருக்கிறது, ஆனால் இரண்டாவது பாதியில் தோய்வு ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார். பின்னர் இவர் கனல் கண்ணன் நடித்த சற்றுமுன் கிடைத்த தகவல் (2009) என்ற திரைப்படத்தில் பணியாற்றத் தொடங்கினார், ஆனால் இடையில் தயாரிப்பாளர் அறிமுக இயக்குனர் புவனை கண்ணனை இவருக்கு பதிலாக மாற்றப்பட்டார். இவரது சமீபத்திய வெளியீடு அடுத்தது (2011), ஒரு பாலைவன தீவில் உண்மைநிலை நிகழ்ச்சி போட்டியாளர்களைப் பற்றிய ஒரு பரபரப்பூட்டும் திரைப்படம். அதில் ஸ்ரீமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.


திரைப்படவியல்

1987 இவர்கள் வருங்காலத் தூண்கள்
1988 மனசுக்குள் மத்தாப்பூ
1988 சூரசம்ஹாரம்
1989 நாளை மனிதன்
1989 வலது காலை வைத்து வா
1990 அதிசய மனிதன்
1990 சிறையில் சில ராகங்கள்
1991 ஜென்ம நட்சத்திரம்
1995 விட்னஸ்
1995 புதிய ஆட்சி
2001 அசோகவனம்
2011 அடுத்தது

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் தக்காளி சீனிவாசன் – விக்கிப்பீடியா

Film Director Thakkali Srinivasan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *