தாமிரா (சனவரி 1, 1977 – ஏப்ரல் 27, 2021) இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் திரைக்கதை, வசனம் எழுதுபவராகவும் திரையுலக இதழ்களுக்கு கட்டுரை எழுதுபவராகவும் இருந்துள்ளார்.
பிறப்பும் படிப்பும்
தாமிரா 1977 சனவரி 1 இல் திருநெல்வேலியில் உள்ள மூலக்கரைப்பட்டியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் செய்யத் தாவுத் என்பதாகும். மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் படித்துள்ளார்.
தொழில்
இவர் கல்லூரி படிப்பை முடித்ததும் பொம்மை என்ற திரைப்பட இதழில் கட்டுரைகள் எழுதி வந்தார். உடன் பல திரை இதழ்களுக்கும் திரைப்படம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வந்தார். கே. பாலச்சந்தரின் தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனமும், திரைக்கதையும் எழுதினார். சகாரா, அண்ணி, மனைவி போன்றவை இவருடைய பங்களிப்பில் உருவான தொடர்களாகும்.
திரை வாழ்க்கை
இவர் இயக்குனர்கள் கே. பாலச்சந்தர், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தினை 2010 இல் இயக்கினார். நடிகர் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் ஆண் தேவதை படத்தினை இயக்கியுள்ளார்.
வசனம்
திரைக்கதை
இறப்பு
கொரோனா தொற்றால், சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், ஏப்ரல் 27, 2021 அன்று காலையில் உயிரிழந்தார்.