நடிகர் போஸ் வெங்கட் | Actor Bose Venkat

போஸ் வெங்கட் (Bose Venkat) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் தி.மு.க தலைமை கழக பேச்சாளர் ஆவார். இவர் பல படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார்.


சொந்த வாழ்க்கை


இவர் சோனியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு தேஜஸ்வின் எனும் மகனும், பவதாரணி எனும் மகளும் உள்ளனர்.


தொழில் வாழ்க்கை


தனது பதினேழாவது அகவையில் சென்னையில் குடியேறினார். மெட்டி ஒலி தொலைக்காட்சித் தொடரில் நடித்ததன்மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார். பின்னர் பாரதிராஜாவின் ஈரநிலம் படத்தில் நடித்தார். இவர் கன்னி மாடம் எனும் திரைப்படத்தினை இயக்கினார்.


வெளி இணைப்புகள்

நடிகர் போஸ் வெங்கட் – விக்கிப்பீடியா

Actor Bose Venkat – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *