திரைப்பட இயக்குனர் முக்தா எஸ். சுந்தர் | Film Director Muktha S. Sundar

முக்தா எஸ். சுந்தர் (Muktha S. Sundar) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ்ப் படங்களில் பணியாற்றியுள்ளார். திரைப்பட தயாரிப்பாளர் முக்தா சீனிவாசனின் மகனான இவர், கோடை மழை (1986) படத்தை முதன்முதலில் இயக்கினார். பின்னர் சின்ன சின்ன ஆசைகள் (1989) எதிர்காற்று (1990) மற்றும் வேதாந்த தேசிகா ஹா என்ற சமஸ்கிருதத்த படங்களில் பணியாற்றினார்.


தொழில்


திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசனின் மகனான சுந்தர் தனது தந்தையின் தயாரிப்பில் கோடை மழை (1986) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சுந்தர் அமெரிக்க திரைப்பட நிறுவனத்தில் ஒளிப்பதிவில் படிப்பை முடித்திருந்தார், மேலும் அவரது தந்தையின் தயாரிப்புகளான கதாநாயகன் (1988), வாய்க் கொழுப்பு (1989) மற்றும் பிரம்மச்சாரி (1992) உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். பின்னர் சின்ன சின்ன ஆசைகள் (1989), எதிர்காற்று (1990) மற்றும் விக்ரம் முன்னணி பாத்திரத்தில் நடித்த கண்களின் வார்த்தைகள் (1989) ஆகிய பங்களை இயக்கினார்.


நகைச்சுவை பரபரப்பு திரைப்படமான பத்தாயிரம் கோடி (2013) திரைப்படத்தின் மூலம் சுந்தர் திரைத்துறைக்கு மீண்டும் வந்தார், இதில் துருவ் பண்டாரி மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படத்தின் தயாரிப்பானது 2011 இன் பிற்பகுதியில் தொடங்கி, 2013 சனவரியில் 2013 வெளிவந்தது.


சுந்தர் தற்போது துஷ்யந்த் ஸ்ரீதர் நடிக்கும் சமஸ்கிருதத்த படமான வேதாந்த தேசிகா ஹே என்ற படத்தை 2018 நிறைவு செய்துள்ளார். | url = https://www.youtube.com/watch?v=VQZprbc0zJQ }}


திரைப்பட வரலாறு

1986 கோடை மழை
1989 சின்ன சின்ன ஆசைகள்
1990 எதிர்காற்று
1998 கண்களின் வர்தைகள்
2013 பத்தாயிரம் கோடி
2018 வேதாந்த தேசிகா ஹா

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் முக்தா எஸ். சுந்தர் – விக்கிப்பீடியா

Film Director Muktha S. Sundar – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *