திரைப்பட இயக்குனர் பி. மாதவன் | Film Director P. Madhavan

பாலகிருஷ்ணன் மாதவன் (1928 – திசம்பர் 16, 2003) தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். மாதவன் 49 திரைப்படங்களை இயக்கியும், “அருண் பிரசாத் மூவீஸ்” என்ற பெயரில் 39 திரைப்படங்களைத் தயாரித்தும் உள்ளார்.


பணி


 • பி. மாதவன் அவர்கள் அப்போதே பி.ஏ பட்டம் பெற்று படித்து முடித்துவுடனே தான் ஒரு நடிகனாக வேண்டும் என்றும் தான் முகம் சிறுவயதிலே அழகாக இருந்தால் தனது தாயார் ராதாமணி இடம் நடித்து காட்டியவுடன் அவர் உனக்கு பெரிய எதிர்காலம் உண்டு என்று கூற தனது சொந்த ஊரான மதுரையில் இருந்து சென்னைக்கு இரயில் ஏறினார். ஆனால் எதிர்காலம் திரையுலகில் அவரை ஒரு இயக்குனர் ஆக மாற்றியது.

 • ஆரம்ப காலத்தில் டி. ஆர். ரகுநாத் மற்றும் ஶ்ரீதர் ஆகிய இயக்குனர்களுடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார்.

 • இவர் 1963 ஆம் ஆண்டு ஏ.எல்.எஸ் பிக்சர்ஸ் தயாரித்த மணியோசை இவரது முதல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நல்ல கதைகளம் இருந்தும் இவரது முதல் படமே தொல்வி அடைந்தது.

 • அதன் பின் சிவாஜி கணேசன் உடன் இணைந்து அன்னை இல்லம் என்ற திரைப்படத்தை இயக்கினார். முதல் திரைப்படமே தொல்வியடைந்ததால் இப்படத்தை சிவாஜி கணேசனை வைத்து மிகவும் கவனத்துடன் இயக்கி வெற்றி திரைப்படமாக்கினார்.

 • இதனால் மேலும் சிவாஜி கணேசனின் நட்பினால் அவரை வைத்து 15 படங்கள் இயக்கியுள்ளார்.

 • எம். ஜி. ஆர் அவர்களின் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவீஸை நிறுவிய ஆர். எம். வீரப்பன் அவர்கள் உதவியால் அந்த நிறுவனத்தின் முதல் திரைப்படமான தெய்வத்தாய் படத்தை எம். ஜி. ஆர் அவர்களை வைத்து இயக்குகின்ற வாய்ப்பை பெற்றார். மேலும் எம்ஜிஆரை வைத்து இவர் இயக்கிய ஒரே திரைப்படமாக அமைந்தது.

 • எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவகுமார், விஜயகுமார், ரஜினிகாந்த் மற்றும் தேவிகா, சௌகார் ஜானகி, கே. ஆர். விஜயா, பத்மினி, சரோஜாதேவி, ஜெயலலிதா, சாரதா, மஞ்சுளா, உஷா நந்தினி, ஸ்ரீபிரியா ஆகிய நடிகைகளை வைத்து பல படங்கள் இயக்கினார்.

 • இவரது இயக்கத்தில் வெளிவந்த புகழ்பெற்ற திரைப்படங்களில் சில மணியோசை, அன்னை இல்லம், தெய்வத்தாய், எங்க ஊர் ராஜா, குழந்தைக்காக, கண்ணே பாப்பா, வியட்நாம் வீடு, ராமன் எத்தனை ராமனடி, நிலவே நீ சாட்சி, சபதம், தேனும் பாலும், ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, ராஜபார்ட் ரங்கதுரை, தங்கப்பதக்கம், மனிதனும் தெய்வமாகலாம், பாட்டும் பரதமும், சங்கர் சலீம் சைமன், ஏணிப்படிகள், ஹிட்லர் உமாநாத், அக்னி பார்வை. ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும்.

 • இதில் குழந்தைக்காக, ராமன் எத்தனை ராமனடி, நிலவே நீ சாட்சி, பட்டிக்காடா பட்டணமா, ஆகிய திரைபடங்களுக்கு தேசிய திரைப்பட விருது பெற்றார்.

 • இவருடன் கதாசிரியர்களான கே. பாலசந்தர், வியட்நாம் வீடு சுந்தரம், பாலமுருகன் ஆகியோர் இவருடைய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியவர்கள்.

 • பின்பு இவர் சொந்தமாக அருண்பிரசாத் மூவிஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதிலும் தமிழ், தெலுங்கு, இந்தி என பிறமொழிகளிலும் பல வெற்றி படங்களை இயக்கினார்.

 • எம். ஜி. ஆர் திரைப்பட நகரின் முதலாவது தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.

 • விருதுகள்


 • 1970 – ராமன் எத்தனை ராமனடி – சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது

 • 1972 – பட்டிக்காடா பட்டணமா – சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது

 • 1970 – நிலவே நீ சாட்சி – சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது

 • இயக்கி, தயாரித்த தமிழ் திரைப்படங்கள்


 • மணியோசை (1963)

 • அன்னை இல்லம் (1963)

 • தெய்வத்தாய் (1964)

 • நீலவானம் (1965)

 • பெண்ணே நீ வாழ்க (1967)

 • முகூர்த்த நாள் (1967)

 • எங்க ஊர் ராஜா (1968)

 • குழந்தைக்காக (1968)

 • கண்ணே பாப்பா (1969)

 • வியட்நாம் வீடு (1970)

 • ராமன் எத்தனை ராமனடி (1970)

 • நிலவே நீ சாட்சி (1970)

 • சபதம் (1971)

 • தேனும் பாலும் (1971)

 • ஞான ஒளி (1972)

 • பட்டிக்காடா பட்டணமா (1972)

 • ராஜபார்ட் ரங்கதுரை (1973)

 • மாணிக்கத் தொட்டில் (1974)

 • முருகன் காட்டிய வழி (1974)

 • தங்கப்பதக்கம் (1974)

 • கஸ்தூரி விஜயம் (1975)

 • மனிதனும் தெய்வமாகலாம் (1975)

 • மன்னவன் வந்தானடி (1975)

 • பாட்டும் பரதமும் (1975)

 • சித்ரா பௌர்ணமி (1976)

 • என்னைப்போல் ஒருவன் (1976)

 • தேவியின் திருமணம் (1977)

 • சங்கர் சலீம் சைமன் (1978)

 • என் கேள்விக்கு என்ன பதில் (1978)

 • வீட்டுக்கு வீடு வாசப்படி (1979)

 • ஏணிப்படிகள் (1979)

 • குருவிக்கூடு (1980)

 • நான் நானே தான் (1980)

 • ஆடுகள் நனைகின்றன (1981)

 • ஹிட்லர் உமாநாத் (1982)

 • சத்தியம் நீயே (1984)

 • கரையை தொடாத அலைகள் (1985)

 • சின்னக்குயில் பாடுது (1987)

 • அக்னி பார்வை (1992)

 • உதவி இயக்கம் :-

 • யார் பையன் (1957) டி.ஆர்.ரகுநாத் இயக்கம்

 • கல்யாண பரிசு (1959) ஸ்ரீதர் இயக்கம்

 • மீண்ட சொர்க்கம் (1960) ஶ்ரீதர் இயக்கம்

 • விடிவெள்ளி (1960) ஶ்ரீதர் இயக்கம்

 • தேன் நிலவு (1961) ஶ்ரீதர் இயக்கம்

 • சுமைதாங்கி (1962) ஶ்ரீதர் இயக்கம்

 • நெஞ்சில் ஓர் ஆலயம் (1962) ஶ்ரீதர் இயக்கம்

 • போலீஸ்காரன் மகள் (1962) ஶ்ரீதர் இயக்கம்

 • பொண்ணுக்கு தங்க மனசு (1973) தேவராஜ்-மோகன் இயக்கம்

 • பாலூட்டி வளர்த்த கிளி (1976) தேவராஜ்-மோகன் இயக்கம்

 • மறைவு


  மாதவன் 2003 திசம்பர் 16 அன்று தனது 75-வது அகவையில் சென்னையில் காலமானார்.


  வெளி இணைப்புகள்

  திரைப்பட இயக்குனர் பி. மாதவன் – விக்கிப்பீடியா

  Film Director P. Madhavan – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *