ராம நாராயணன், (ஏப்ரல் 3, 1949 – சூன் 22, 2014) இந்தியத் திரைத்துறையைச் சார்ந்தவர். தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர். தயாரிப்பு பணிகளையும் செய்துள்ளார். இவரது திரைப்படங்களில் பலவற்றில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 36 ஆண்டுகளில் 125 திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளது ஓர் உலக சாதனையாகும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். இவர் ஒரு மலேய மொழிப் படத்தை இயக்கியுள்ளார். சில திரைப்படங்களுக்கு கதையும் எழுதினார்.
திரைப்படங்கள்
தயாரித்தவை
இயக்கியவை
மரணம்
இராம நாராயணன் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிங்கப்பூரில் உள்ள ஓர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சூன் 22, 2014 அன்று சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூரில் மரணமடைந்தார்.
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் ராம நாராயணன் – விக்கிப்பீடியா