வேந்தன்பட்டி அழகப்பன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். சுரேஷ், ரேவதி ஆகியோர் நடித்த ஆகாயத் தாமரைகள் (1985) என்ற காதல் நாடகத் திரைப்படத்தை உருவாக்கிய பின்னர் இவர் புகழ் பெற்றார். இதேபோன்ற வகைகளில் தொடர்ந்து படங்களை உருவாக்கி வருகிறார்.
தொழில்
தனது தொழில் வாழ்க்கையில் அழகப்பன் வழக்கமாக நடிகர் ராமராஜன், சுரேஷ் ஆகியோருடன் தவறாமல் பணியாற்றியுள்ளார். இவரது இறுதி வெளியீடான, பூ மனமே வா (1999) நளினி சினி ஆர்ட்ஸ் என்ற பதாகையின் கீழ் ராமராஜனின் மனைவி நளினி ராமராஜனால் தயாரிக்கபட்டது. தயாரிப்பின் போது, இந்த படம் நடிகரின் 40 வது படம் என்றும், இயக்குனராக 11 வது படம் என்றும் அறிவிக்கபட்டது. வி. அழகப்பனுக்கு பின்னரே இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. படத்தில் முதலில் சந்திரசேகர், மனோரமா, சந்தான பாரதி போன்ற நடிகர்களும் நடிப்பார்கள் என அறிவிக்கபட்டிருந்தது. ஆனால் இறுதியில் அவர்கள் இடம்பெறவில்லை.
திரைப்படவியல்
1980 | ராமாயி வயசுக்கு வந்துட்டா |
---|---|
1985 | ஆகாயத் தாமரைகள் |
1986 | பூக்களை பறிக்காதீர்கள் |
1986 | நம்ம ஊரு நல்ல ஊரு |
1987 | பூமழை பொழியுது |
1987 | பூ பூவா பூதிருக்கு |
1988 | குங்குமக்கோடு |
1988 | இரண்டில் ஒன்று |
1988 | என் வழி தனி வழி |
1989 | தங்கமான ராசா |
1991 | தங்கத் தாமரைகள் |
1999 | பூ மனமே வா |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் வி. அழகப்பன் – விக்கிப்பீடியா