நடிகர் ஜி. எம். குமார் | Actor G. M. Kumar

ஜி. எம். குமார் (G. M. Kumar) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார்.


தொழில்


குமார் சிவாஜி புரொடக்சன்சின் தயாரிப்பில், பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அறுவடை நாள் (1986) படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இது குமார் பல படங்களை உருவாக்க வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. இருப்பினும் இளையராஜாவை இசையமைப்பாளராக நியமிக்க விரும்பாத தயாரிப்பாளர்களின் படங்கள் பலவற்றை நிராகரித்ததாக குறிப்பிட்டார். இதனால் இவரது வணிக மதிப்பு கணிசமாகக் குறைந்து. இவரது ஆரம்ப வெற்றிக்குப் பிறகு மூன்று திரைப்படங்களை மட்டுமே இயக்கினார். உருவம் படத்தை இயக்கி, தயாரிக்க எடுத்த முடிவானது இவரை திவால் நிலைக்கு தள்ளியது. பாரதிராஜாவின் கேப்டன் மகள் (1992) படத்தில் எதிர்மறை பாத்திரத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் ஆவணப்படங்களை உருவாக்குவதற்கும் மானுடவியல் குறித்து அறிவதற்குமான பணிகளில் ஈடுபட்டார். 2000 களின் முற்பகுதியில், இவர் மீண்டும் திவாலாகும் நிலையின் விளிம்பில் இருந்தார். மேலும் ராமச்சந்திரா, வெளியிடப்படாத சிவலிங்கம் ஐ. பி. எஸ் உள்ளிட்ட படங்களில், சிறு வேடங்களில் நடிக்க ராஜ்கபூர் இவரை தேர்வு செய்தார். பின்னர் ஷங்கரின் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கபட்ட வெயில் (2006) படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.


மேலும் இவரை அவன் இவானில் ஹைனெஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க பாலா அணுகினார். அப்படத்தில் இவரது நடிப்பு இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றுத்தந்தது. விமர்சகர்கள் இவரது நடிப்பை “ரிவெர்டிங்” என்று அழைத்தனர். இருப்பினும் படம் சராசரி விமர்சனங்களை மட்டுமே பெற்றது.


திரைப்படவியல்


நடிகராக

1993 கேப்டன் மகள்
2002 காதல் வைரஸ்
2003 ராமச்சந்திரா
2005 தொட்டி ஜெயா
2006 வெயில்
2007 மச்சக்காரன்
மலைக்கோட்டை
2008 ஆயுதம் செய்வோம்
குருவி
2009 மாயாண்டி குடும்பத்தார்
தீ
2010 மாத்தி யோசி
மிளகா
2011 அவர்களும் இவர்களும்
அவன் இவன்
வேலூர் மாவட்டம்
2013 சந்தமாமா
2014 ஜகஜால பூஜபல தெனாலிராமன்
அப்புச்சி கிராமம்
2015 சண்டமாருதம்
அகத்திணை
யட்சன்
2016 தாரை தப்பட்டை
என்னமா கதவுடுறானுங்க
2017 சரவணன் இருக்க பயமேன்
திறப்பு விழா
எண்பத்தெட்டு
வேலையில்லா பட்டதாரி 2
கிடா விருந்து
2018 ஜருகண்டி
2019 நான் அவளை சந்தித போது
2021 சிதம்பரம் ரயில்வேகேட்
கர்ணன்

இயக்குநராக

1986 அறுவடை நாள்
1989 பிக்பாக்கெட்
1991 இரும்பு பூக்கள்
உருவம்

எழுத்தாளராக

1985 கன்னிராசி
1985 காக்கிசட்டை
1990 மை டியர் மார்த்தாண்டன்

தொலைக்காட்சி


 • தேவதையை கண்டேன் வாசுதேவனின் தாத்தாவாக (2017)

 • பூவே உனக்காக சங்கரலிங்கமாக (2020)

 • வலைத் தொடர்

  2021 நவம்பர் ஸ்டோரி

  வெளி இணைப்புகள்

  நடிகர் ஜி. எம். குமார் – விக்கிப்பீடியா

  Actor G. M. Kumar – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.