விஜய் கிருஷ்ணராஜ் (Vijay Krishnaraj) என்று அழைக்கப்படும் ஆர் கிருஷ்ணன் ஒரு இந்திய நடிகர், எழுத்தாளர், இயக்குனர் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார். 1979 ஆம் ஆண்டில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் கதை மற்றும் உரையாடல் எழுத்தாளராக தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். எஸ். தேவராஜன் இயக்கிய தமிழ் திரைப்படமான ராஜாத்தி ரோஜாக்கிளியில் சுலக்சனாவுடன் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
திரைப்பட வாழ்க்கை
இவர் தமிழ்நாட்டின் நமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோட்டில் பிறந்தார். ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் கதை எழுத்தாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது கதை, வசனத்தில் எடுக்கபட்ட குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக ரோசாப்பூ ரவிக்கைக்காரி, கல்தூண், ராணுவ வீரன் போன்றவை ஆகும். பின்னர், 1985 ஆம் ஆண்டில் ராஜாத்தி ரோஜாக்கிளி படத்தில் துணை வேடத்தில் நடித்தார். மூத்த தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராகவேந்திர ராவின் ஆறு படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இவர் நடித்து நன்கு அறியப்பட்ட திரைப்படங்களாக ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே , காலையும் நீயே மாலையும் நீயே, பூந்தோட்ட காவல்காரன், சந்தனக் காற்று, வான்மதி, வாய்மையே வெல்லும் போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார் என்றாலும் அண்ணன் என்னடா தம்பி என்னடா படத்தில் நடிதமைக்காக இவரது நடிப்பு பாராட்டபட்டது .
தொலைக்காட்சி வாழ்க்கை
2000 களின் முற்பகுதியில் படிப்படியாக இவர் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது, இவர் பல தமிழ் தொடர்களில் நடித்து வருகிறார். இவரது குறிப்பிடத்தக்க தமிழ் தொலைக்காட்சித் தொடர்களளின் பட்டியல் கீழே:
திரைப்படவியல்
நடிகராக
1985 | ராஜாத்தி ரோஜாக்கிளி |
---|---|
1986 | தாய்க்கு ஒரு தாலாட்டு |
1988 | காலையும் நீயே மாலையும் நீயே |
1988 | பூந்தோட்ட காவல்காரன் |
1989 | நினைவு சின்னம் |
1990 | வாழ்க்கைச் சக்கரம் |
1990 | புலன் விசாரணை |
1990 | சந்தனக் காற்று |
1990 | வேலை கிடைச்சுடுச்சு |
1990 | மதுரை வீரன் எங்க சாமி |
1992 | அண்ணன் என்னடா தம்பி என்னடா |
1993 | மதுரை மீனாட்சி |
1993 | ஏழை ஜாதி |
1994 | வண்டிச்சோலை சின்ராசு |
1994 | மகுடிக்காரன் |
1995 | செல்லக்கண்ணு |
1996 | வான்மதி |
1996 | ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே |
1997 | ரெட்டை ஜடை வயசு |
1997 | கல்யாண வைபோகம் |
1997 | வாய்மையே வெல்லும் |
1997 | ரட்சகன் |
1998 | பகவத் சிங் |
2000 | நினைவெல்லாம் நீ |
2000 | வல்லரசு |
2000 | தை பொறந்தாச்சு |
2001 | எங்களுக்கும் காலம் வரும் |
2002 | கேம் |
2003 | திருமலை |
2004 | குத்து |
2006 | கோவை பிரதர்ஸ் |
2006 | இலக்கணம் |
2007 | பிறப்பு |
2007 | பெரியார் |
2008 | பட்டைய கெளப்பு |
2008 | தித்திக்கும் இளமை |
2008 | கோடைக்கானல் |
2008 | வைத்தீஸ்வரன் |
2018 | ஓநாய்கள் ஜாக்கிரதை |
2019 | அழியாத கோலங்கள் 2 |
கதை மற்றும் உரையாடல் எழுத்தாளராக
1979 | ரோசாப்பூ ரவிக்கைக்காரி |
---|---|
1980 | ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது |
1981 | கல்தூண் |
1981 | ராணுவ வீரன் |
1982 | நெஞ்சங்கள் |
1982 | ஊரும் உறவும் |
1985 | ராஜாத்தி ரோஜாக்கிளி |
1986 | தாய்க்கு ஒரு தாலாட்டு |
இயக்குநராக
1982 | கண்ணோடு கண் |
---|---|
1984 | சிம்ம சொப்பனம் |
1985 | திறமை |
1987 | வாழ்க வளர்க |
1992 | அண்ணன் என்னடா தம்பி என்னடா |
1994 | தாட்பூட் தஞ்சாவூர் |
பின்னணி குரல் கலைஞராக
2003 | பாறை |
---|
வெளி இணைப்புகள்
நடிகர் விஜய் கிருஷ்ணராஜ் – விக்கிப்பீடியா
Actor Vijay Krishnaraj – Wikipedia