பி. விட்டலாச்சாரியா (B. Vithalacharya or B. Vittalacharya) (சனவரி 1920 – 28 மே 1999) இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர்.
விட்டல் புரடெக்சன் எனும் பெயரில், விட்டலாச்சரியா தனது சொந்த திரைப்பட நிறுவனத்தை நிறுவி, 1953ல் இராச்சிய லெட்சுமி எனும் கன்னடத் திரைப்படத்தை தயாரித்து, இயக்கினார்.
1954ல் தெலுங்கு மொழியில் கன்னியாதானம் எனும் திரைப்படத்தை இயக்கினார். பின்னர் திரைப்படங்களை இயக்க சென்னைக்கு நிரந்தரமாக குடிபெயர்ந்தார். இவர் என். டி. இராமராவை கதாநாயகனாகக் கொண்டு 19 தெலுங்குத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்கள் தமிழ் மொழியில், மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
திரைப்படங்கள்
1953 | இராச்சிய லெட்சுமி |
---|---|
1954 | கன்னியாதானம் |
1956 | முத்தியதே பாக்யா |
1956 | வட்டண்டி பெல்லி |
1957 | ஜெயா விஜயா |
1957 | மனே தும்பித ஹெண்ணு |
1958 | அண்ணா செல்லலு |
1958 | மனே தும்பித ஹெண்ணு |
1958 | பெல்லி மீத பெல்லி |
1959 | பெண்குலத்தின் பொன் விளக்கு |
1960 | அண்ணா செல்லிலு |
1960 | கனக துர்கா பூஜை மகிமை |
1961 | வரலெட்சுமி விரதம் |
1962 | காதி கண்ணையா |
1962 | மதன காம ராஜு கதா |
1963 | பண்டிபொட்டு |
1963 | குருவை மிஞ்சிய சிஷ்யன் |
1963 | நவ கிரக பூஜா மகிமை |
1963 | வீர கேசரி |
1964 | அக்கி பிடுகு |
1965 | ஜுவால தீப இரகசியம் |
1965 | மங்கம்மா சபதம் (1965) |
1965 | விஜய சிம்மன் |
1966 | அக்கி பரதா |
1966 | இத்தரு மொனகலு |
1967 | சிக்கடு தொரகடு |
1967 | பிடுகு ராமுடு |
1967 | அக்கி டோரா |
1968 | பலே மொனகாடு |
1968 | கடலாடு வடலாடு |
1969 | கந்தி கோட்டா ரகசியம் |
1969 | அக்கி வீருடு |
1970 | அலிபாபா 40 தொங்கலு |
1970 | லெட்சுமி கடாட்சம் |
1971 | இராஜா கோட்டை இரகசியம் |
1971 | சி. ஐ. டி. இராஜு |
1972 | பீதலபாட்லு |
1973 | பல்லுதுரி சின்னோடு |
1974 | ஆடதானி அத்ரிஷ்டம் |
1975 | கோடாலு பகா |
1978 | ஜெகன்மோகினி |
1979 | கந்தர்வ கண்யா |
1980 | மதன மஞ்சரி |
1983 | நவ மோகினி |
1984 | ஜெய் பேதாளா 3டி |
1985 | மோகினி சபதம் |
1986 | வீர பிரதாப் |
1987 | சிறீ தேவி காமாட்சி கடாட்சம் |
1991 | சிறீ சைலம் பிரம்மாம்பிகா கடாட்சம் |
1992 | கருணிச்சின கனகதுர்கா |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் பி. விட்டலாச்சாரியா – விக்கிப்பீடியா
Film Director B. Vittalacharya – Wikipedia