ஹலிதா ஷமீம் (Halitha Shameem) தமிழ்த் திரைப்பட இயக்குநர். இவரது சொந்த ஊர் தாராபுரம். கொடைக்கானலில் பள்ளிப்படிப்பையும் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். இவர் இயக்குநர்கள் புஷ்கர்-காயத்திரி மற்றும் மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 2014 இல் இவரது முதல் தமிழ்த் திரைப்படம் பூவரசம் பீப்பீ வெளியானது. ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் 2019 இல் நான்கு கதைகள் கொண்ட சில்லுக்கருப்பட்டி தமிழ்த் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் விமர்சனம் மற்றும் வணிக ரீதியாக வெற்றிபெற்றது.
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் ஹலிதா ஷமீம் – விக்கிப்பீடியா
Film Director Halitha Shameem – Wikipedia