திரைப்பட இயக்குனர் ஜெயபாரதி | Film Director Jayabharathi

ஜெயபாரதி என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் ஆவார். தமிழ் எழுத்தாளர்களான து. ராமமூர்த்தி, சரோஜா ராமமூர்த்தி ஆகியவர்கள் இவரது பெற்றோர்.


பத்திரிக்கைத் துறையில்


இவர் திரைத் துறைக்கு வருவதற்கு முன்னால் பத்திரிகையாளனாகப் பணிபுரிந்தார். தினமணியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். தினமணி, தினமணிக்கதிர் ஆகியவற்றில் சிறுகதைகள், திரைப்பட விமர்சனம் போன்றவற்றை எழுதியுள்ளார். இந்தி, ஆங்கிலம், தமிழ்ப் படங்களுக்கு விமர்சனம் எழுதுவார். அப்படித்தான் இவரின் திரைப்பட வாழ்க்கைத் தொடங்கியது. இவர் பத்திரிக்கையில் எழுதிய விமர்சனங்கின் மூலம் இயக்குநர் பாலசந்தர் அறிமுகம் ஏற்பட்டது. அவர் 1976 இல் மூன்று முடிச்சு படத்தில் ரஜினி நடித்த வேடத்தில் முதலில் இவரை நடிக்கவைக்க நினைத்திருந்தார். இதற்கு பாலச்சந்தர் கேட்டபோது தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை படங்களை இயக்கலாம் என்று இருக்கிறேன் என மறுத்துவிட்டார்.


இயக்குநராதல்


இவர் 1976 முதல் மாற்றுத் திரைப்டத்திற்கான முயற்சியில் ஈடுபட்டுவந்தார். ஆனால் இவருக்கு திரைத் துறையில் எந்தப் பின்னணியும் இல்லை. திரைப்படக் கல்லூரியில் படிக்காமல், பிற இயக்குநர்களிடம் பணிபுரிந்த அனுபவம் போன்றவை இல்லாமல், திரைத் துறை சார்ந்த புத்தகங்களை படித்து, தானாகவே திரைக்கலையைக் கற்றுக்கொண்டவர். தனது நண்பர்களின் உதவியுடன் குடிசை படத்தைத் தொடங்கினார். மிகப் பெரிய போராட்டத்துக்குப் பின்னர் 1979 மார்ச்சில் படம் வெளியானது. இவரது வாழ்க்கை அனுபவங்களை இங்கே எதற்காக என்ற பெயரில் தனவரலாற்று நூலாக எழுதியுள்ளார்.


இயக்கியத் திரைப்படங்கள்


  • குடிசை

  • ரெண்டும் ரெண்டும் அஞ்சு (1988)

  • உச்சி வெயில்

  • நண்பா நண்பா (2002)

  • குருஷேத்திரம் (2006)

  • புத்திரன்

  • வெளி இணைப்புகள்

    திரைப்பட இயக்குனர் ஜெயபாரதி – விக்கிப்பீடியா

    Film Director Jayabharathi – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *