பிரபு சாலமன் தமிழகத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனராவார். இவர் தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலி எனுமிடத்தில் பிறந்தவர், தற்போது சென்னை வளசரவாக்கத்தில் வசிக்கிறார். புனித பால் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி நெய்வேலியில் தனது பள்ளிக் கல்வியை முடித்தவர். காதல் கோட்டை திரைப்படத்திற்காக நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற இயக்குநர் அகத்தியன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
திரைப்பட விபரம்
1999 | கண்ணோடு காண்பதெல்லாம் |
---|---|
2001 | Usire |
2002 | கிங் |
2006 | கொக்கி |
2007 | Lee |
2009 | லாடம் |
2010 | மைனா |
2012 | சாட்டை |
2012 | கும்கி |
2014 | கயல் |
2016 | தொடரி |
2017 | ரூபாய் |
2020 | காடன் |
ஹாதி மேரே சாதி | |
ஆரண்யா |
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் பிரபு சாலமன் – விக்கிப்பீடியா
Film Director Prabhu Solomon – Wikipedia