திரைப்பட இயக்குனர் வி. சி. குகநாதன் | Film Director V. C. Guhanathan

வி. சி. குகநாதன் (V. C. Guhanathan, பிறப்பு: 1951) தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், திரைக்கதை வசனகர்த்தாவும் ஆவார்.


வாழ்க்கைக் குறிப்பு


குகநாதன் இலங்கையின் வடக்கே புங்குடுதீவில் செல்லையா, இராஜேசுவரி ஆகியோருக்கு ஏழு பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தார். 11 வயது வரை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த இவர், தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்து பச்சையப்பன் கல்லூரியில் கல்வி பயின்றார்.


திரைப்படத் துறையில்


இவரது எழுத்துத் திறமையை முதலில் கண்டறிந்தவர் நடிகர் எம்ஜிஆர். எம்ஜிஆர் இவரை இயக்குநர் சாணக்கியாவிடம் அறிமுகப்படுத்தினார். அவரது புதிய பூமி (1968) திரைப்படத்திற்கு 17வது அகவையில் திரைக்கதை, வசனம் எழுதினார். பின்னர் ஏவிஎம் நிறுவனத்தில் பணியாற்றினார். சிவாஜி கணேசன், என். டி. ராமராவ், நாகேசுவரராவ் போன்ற பல நடிகர்களின் திரைப்படங்களில் பணியாற்றினார். ஏவிஎம் செட்டியாரின் ஆலோசனைப்படி, 20வது அகவையில் ஏவிஎம் சித்திரமாலா கம்பைன்சு என்ற பெயரில் கம்பனி ஒன்றை ஆரம்பித்து சுடரும் சூறாவளியும் (1972), ராஜபார்ட் ரங்கதுரை (1973), பெத்த மனம் பித்து (1973) போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்தார். தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் டி. ராமா நாயுடு தான் தயாரித்த மதுரகீதம் (1977) திரைப்படத்திற்கு இயக்குநராக குகநாதனைத் தேர்ந்தெடுத்தார். அதன் பின்னர் குகநாதன் ரசினிகாந்த், அஜித் குமார் உட்படப் பல பிரபல நடிகர்களின் படங்களை இயக்கினார். 2010 ஆம் ஆண்டு வரை குகநாதன் ஒன்பது இந்திய மொழிகளில் வெளியான 249 திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் 49 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தம்ழில் 51 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.


குடும்பம்


இவர் நடிகை ஜெயாவைத் திருமணம் புரிந்தார். நடிகை ஜெயாவை தனது கனிமுத்துப் பாப்பா (1972) திரைப்படத்தில் குகநாதன் அறிமுகப்படுத்தினார்.


பணியாற்றிய திரைப்படங்கள் சில


இயக்கிய படங்கள்


  • மஞ்சள் முகமே வருக (1975)

  • மதுரகீதம் (1977)

  • மச்சானை பாத்தீங்களா (1978)

  • மாங்குடி மைனர் (1978)

  • முயலுக்கு மூணு கால் (1979)

  • தனிக்காட்டு ராஜா (1982)

  • ஏமாற்றாதே ஏமாறாதே (1985)

  • கைநாட்டு (1988)

  • மைனர் மாப்பிள்ளை (1996)

  • கதை, வசனம் எழுதிய படங்கள்


  • புதிய பூமி (1968)

  • அன்னையும் பிதாவும் (1969)

  • எங்க மாமா (1970)

  • குமரி கோட்டம் (1971)

  • தங்கைக்காக (1971)

  • கனிமுத்து பாப்பா (1972)

  • காசி யாத்திரை (1973)

  • நீதியின் நிழல் (1985)

  • பேர் சொல்லும் பிள்ளை (1987)

  • மனிதன் (1987)

  • மின்சார கனவு (1997)

  • தயாரித்த படங்கள்


  • சுடரும் சூறாவளியும் (1971)

  • ராஜபார்ட் ரங்கதுரை (1973)

  • பெத்த மனம் பித்து (1973)

  • வெளி இணைப்புகள்

    திரைப்பட இயக்குனர் வி. சி. குகநாதன் – விக்கிப்பீடியா

    Film Director V. C. Guhanathan – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *