திரைப்பட இயக்குனர் வி. பிரியா | Film Director V. Priya

வி. பிரியா (V. Priya) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். சுஹாசினியினடம் கைவினைப்பொருளைக் கற்றுக்கொண்ட பிறகு இயக்குனர் மணி ரத்னத்தின் உதவியாளராக பணியாற்றினார்.


தொழில் வாழ்க்கை


பிரசன்னா, லைலா மற்றும் கார்த்திக் குமார் நடித்த காதல் நகைச்சுவைத் திரைப்படமான கண்ட நாள் முதல் (2005) மூலம் பிரியா இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் வெளியானபோது நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் இராண்டாம் பாதி திரைப்படம் சற்று குறைகளைக் கொண்டிருந்ததாக கருதப்பட்டது. பிருத்விராஜ், சந்தியா மற்றும் சத்யராஜ் நடித்த இவரது இரண்டாவது படமான கண்ணாமூச்சி ஏனடா (2007) விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.


2008 ஆம் ஆண்டில், பிருத்விராஜ் மற்றும் பவானா ஆகியோர் நடிப்பில் செரி என்ற மூன்றாவது திரைப்படத்தினை இயக்க திட்டமிட்டார், ஆனால் படம் உருவாகவில்லை. இவர் தனது கணவர் பூஷன் கல்யாணுடன் ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்ட உயிர்மெய் எனும் தொலைக்காட்சித் தொடரின் கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ளார் . ஆடி லட்சுமி புராணம் எனும் கன்னட திரைப்படத்தினை இயக்கினார்.


திரைப்படவியல்

2002 மித்ர், என் நண்பர்
2005 கண்ட நாள் முதல்
2007 கண்ணமூச்சி ஏனடா
2008 ஹீரோவா? ஜீரோவா?
2018 ஆதி லட்சுமி புராணா

வெளி இணைப்புகள்

திரைப்பட இயக்குனர் வி. பிரியா – விக்கிப்பீடியா

Film Director V. Priya – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *