வெற்றிமாறன் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது முதல் திரைப்படமான பொல்லாதவன் நடப்பு நிலைக்கு மிக அண்மையாகப் படம்பிடித்துக் காட்டியதற்காக மிகவும் பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
கல்வி
இவர் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். ஆங்கில முதுகலைப் பட்டம் முடிக்கும் தருவாயில்,தனது பதினைந்து வயதிலேயே சினிமா மீதான ஆர்வம் இவருக்கு வந்துவிட்டது. ஆனால் அதை வெளிப்படுத்துகிற துணிச்சல் மட்டும் இல்லாமல் இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்து சென்னை லயோலா கல்லூரியில் சேரும்போதுதான், அதற்கான தருணம் வாய்த்தது. அந்த தைரியத்தை பேராசிரியர் ச. ராஜநாயகம் கொடுத்திருக்கிறார். . ‘சினிமாதான் உன் எதிர்காலம் என்று நினைத்தால் அதில் ஈடுபடு’ என்று உற்சாகமாகப் பேசியிருக்கிறார். இவரது இந்தப் பயணத்திற்கு தொடக்கமாக ச.ராஜநாயகம் இருந்துள்ளார். அவரே வெற்றிமாறனை இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகவும் சேர்த்துவிட்டார். பாலுமகேந்திராவிடம், கதை நேரம் தொலைக்காட்சித் தொடரில் பணியாற்ற கல்லூரி படிப்பை நிறுத்தினார். இவர் திரைப்படக்கலையைப் பாலுமகேந்திராவிடம் முதன்மையாகக் கற்றார்.
சொந்த வாழ்க்கை
வெற்றி மாறனின் மனைவி பெயர் ஆர்த்தி. கல்லூரி காலத்து காதல். இவர்களுக்கு பூந்தென்றல் என்ற மகள் உண்டு.
இயக்கிய திரைப்படங்கள்
திரைப்படங்கள்
2007 | பொல்லாதவன் |
---|---|
2011 | ஆடுகளம் |
2013 | உதயம் என்.எச்4 |
நான் ராஜாவாகப் போகிறேன் | |
2014 | பொறியாளன் |
2015 | காக்கா முட்டை |
2016 | விசாரணை |
கொடி | |
2017 | லென்ஸ் |
2018 | அண்ணனுக்கு ஜே |
வட சென்னை | |
2019 | அசுரன் |
திரைக்கதை பங்களிப்புகள்
விருதுகள்
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் – விக்கிப்பீடியா
Film Director Vetrimaaran – Wikipedia