எஸ். டி. விஜய் மில்டன் (S. D. Vijay Milton) இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். இவர் தமிழ் திரைப்படங்களை, இயக்கியும் வருகிறார். அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற நகைச்சுவைக் காதல் படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் (2006) நடிகர் பரத்தும், மல்லிகா கபூரும் நடித்துள்ளனர். 2012 ஆண்டு வரை, இவர் 22 திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். காதல் (திரைப்படம்), வழக்கு எண் 18/9. ஆகிய படங்கள், இவரைப்பற்றிய பரபரப்பு உரையாடலை, திரைப்படச் சமூகத்தில் உருவாக்கியது.
பணிச்சூழல்
கோலி சோடா திரைப்பட வெற்றிக்குப் பிறகு, விஜய் மில்டன் திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். இவர் தயாரிக்கும் இடம் மாறி இறங்கியவன், என்ற படத்தில் விக்ரமும், சமந்தாவும் நடிக்கின்றனர். இவர் டி. ஆர். போல, நடைமுறை வாழ்க்கையில் இருக்கும் சாதரண ஒரு நபர், அவர்தம் வாழ்க்கையின் கதாநாயகர்களாக இருப்பதை உணர்த்துகிறார்.
திரைப்படங்கள்
1998 | பிரியமுடன் |
---|---|
1999 | நெஞ்சினிலே |
1999 | பூப்பறிக்க வருகிறோம் |
1999 | ஹலோ |
2001 | சாக்லெட் |
2002 | தயா |
2003 | காதலுடன் |
2003 | சூரி |
2004 | ஆட்டோகிராப் |
2004 | போஸ் |
2004 | காதல் |
2006 | அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது |
2007 | தீபாவளி |
2008 | காதலில் விழுந்தேன் |
2010 | ஆட்ட நாயகன் |
2011 | உதயன் |
2012 | வழக்கு எண் 18/9 |
2012 | எப்படி மனசுக்குள் வந்தாய் |
2013 | வனயுத்தம் |
2013 | அட்டகாசா |
2014 | கோலி சோடா |
2014 | விழித்திரு |
2014 | 10 எண்றதுக்குள்ள |
2017 | கடுகு |
விருதுகள்
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் விஜய் மில்டன் – விக்கிப்பீடியா