விக்ரமன் (ஆங்கில மொழி: Vikraman) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். இவருடைய திரைப்படங்கள் இனிமையான பாடல்களுக்காகவும் குடும்பப் பாங்கான கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காகவும் அறியப்படுகின்றன. இவருடைய படங்களில் பெண்களின் மீதான சமூக அக்கறை அதிகமாகவே இருக்கும். தற்போது தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக உள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் சென்னையில் வசிக்கிறார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
திரைப்பட வரலாறு
புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
திரைப்படங்கள்
எண் | ஆண்டு | படம் |
---|---|---|
1 | 1990 | புது வசந்தம் |
2 | 1991 | பெரும்புள்ளி |
3 | 1993 | கோகுலம் |
4 | நான் பேச நினைப்பதெல்லாம் | |
5 | 1994 | புதிய மன்னர்கள் |
6 | 1996 | பூவே உனக்காக |
7 | 1997 | சூரிய வம்சம் |
8 | 1998 | உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் |
9 | 2000 | வானத்தைப் போல |
10 | 2002 | உன்னை நினைத்து |
11 | 2003 | பிரியமான தோழி |
12 | வசந்தம் | |
13 | 2004 | செப்பவே சிறுகாலி |
14 | 2006 | சென்னை காதல் |
15 | 2009 | மரியாதை |
16 | 2013 | நினைத்தது யாரோ |
விருதுகள்
புது வசந்தம்
கோகுலம்
சூரிய வம்சம்
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
வானத்தைப் போல
உன்னை நினைத்து
வெளி இணைப்புகள்
திரைப்பட இயக்குனர் விக்ரமன் – விக்கிப்பீடியா
Film Director Vikraman – Wikipedia