விக்ரம் கே. குமார் என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தெலுங்கு,தமிழ், இந்தி திரைப்படத்துறைகளில் படங்களை இயக்கியுள்ளார்.
சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்ட படிப்பை முடித்தார். 1997 இல் இயக்குனர் பிரியதர்சன் என்பவரிடம் துணை இயக்குனராக இணைந்தார். சந்திரலேகா என்ற திரைப்படத்திலும், டோலி சஜா கி ரக்னா. ஹேரா ஃபெரி திரைப்படத்திலும் துணை இயக்குனராக பணியாற்றினார்.
1998 இல் சைலண்ட் ஸ்க்ரீம் என்ற திரைப்படத்தினை முதன்முதலாக இயக்கினார். இத்திரைப்படம் சிறந்த சுயமுன்னேற்றத்திற்கான திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது.
2001 இல் பெரியதிரை திரைப்படமாக தெலுங்கில் இஸ்டம் திரைப்படத்தினை இயக்கினார். இப்படத்தில் சிரேயா சரன் அறிமுகமானார்.யாவரும் நலம் (13பி) என்ற திகில் திரைப்படத்தினை நடிகர் மாதவனை நாயகனாக வைத்து இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் தந்தார்.
யாவரும் நலம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதிர்ஸ்டசாலி என்ற பெயரில் அதன் தொடர்ச்சியை எடுக்க திட்டமிட்டார். அப்படத்தின் நாயகனாக மாதவன் தேர்வு செய்யப்பட்ட போதும், கைவிடப்பட்டது.
திரைப்படங்கள்
1998 | சயிலனட் ஸ்கீம் |
---|---|
2001 | இஸ்டம் |
2003 | அலை |
2009 | யாவரும் நலம் |
யாவரும் நலம் | |
2012 | இஸ்க் |
2014 | மனம் |
2016 | 24 |
2017 | ஹலோ |