அல்பேனியா (Albania, /ælˈbeɪniə, ɔːl-/ (கேட்க) a(w)l-BAY-nee-ə; அல்பேனிய: Shqipëri/Shqipëria அதிகாரபூர்வமாக அல்பேனியக் குடியரசு (Republic of Albania) என்பது ஐரோப்பாவின் தென்க்ழக்கேயுள்ள ஒரு நாடாகும். 28,748 சதுரகிமீ பரப்பளவுள்ள இந்நாட்டின் மக்கள்தொகை 3 மில்லியன்கள் as of 2016[update] ஆகும். இந்நாடு ஓர் ஒற்றை நாடாளுமன்றக் குடியரசு ஆகும். இதன் தலைநகரம் டிரானா. டிரானா இந்நாட்டின் மிகப்பெரும் நகரமும், முக்கிய பொருளாதார மற்றும் வணிக மையமும் ஆகும்.
அல்பேனியா பால்கன் குடாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடமேற்கே மொண்டெனேகுரோ, வடகிழக்கே கொசோவோ, கிழக்கே மாக்கடோனியா, தெற்கு, மற்றும் தென்கிழக்கே கிரேக்கம் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. நாட்டின் பெருமாலான பகுதிகள் மலைப்பாங்கானவை. வடக்கே அல்பேனிய ஆல்ப்சு மலைகள், கிழக்கே கோராப் மலைகள், தெற்கே செரோனிய மலைகள், நடுவே இசுக்காண்டர்பெக் மலைகள் அமைந்துள்ளன. அல்பேனியாவின் கரைப் பகுதிகள் மேற்கே ஏட்ரியாட்டிக் கடல், தென்மேற்கே அயோனியன் கடல் ஆகியவற்றைத் தொடுகிறது.
குழப்பமான வரலாற்றைக் கொண்டிருந்த போதும், 1990 முதல் சனநாயகத்துக்கு திரும்பும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.