எக்குவடோரிய கினி (Equatorial Guinea), மத்திய ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மிகச் சிறிய நாடுகளில் ஒன்று. இது ரியோ மூனி எனப்படும் பெரும் பரப்பையும், பியோக்கோ தீவு, தெற்கு அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள அன்னொபோன் தீவு, மற்றும் பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. இதன் தலைநகர் மலபோ பியோக்கோ தீவில் உள்ளது. இந்நாட்டின் எல்லைகளாக வடக்கே கமரூன், தெற்கு மற்றும் கிழக்கே காபொன், மேற்குப் பகுதியில் கினி வளைகுடா (இங்கு சாவோ தோமே பிரின்சிபே என்ற தீவு நாடு உள்ளது).
ஸ்பானிய கினி என்ற முன்னாள் ஸ்பானியக் குடியேற்ற நாடான இது கினி வளைகுடாவுக்கும் மத்திய கோட்டிற்கும் (equator) அருகில் உள்ளதால் இதனை எக்குவடோரியல் கினி என அழைக்கிறார்கள்.
வெளி இணைப்புகள்
எக்குவடோரியல் கினி – விக்கிப்பீடியா