எத்தியோப்பியா | Ethiopia

எத்தியோப்பியா (Ethiopia, அம்காரியம்: ኢትዮጵያ?, ʾĪtyōṗṗyā, இத்தியோப்பியா, கேட்க (உதவி·தகவல்)), அதிகாரப்பூர்வமாக எத்தியோப்பியக் கூட்டாட்சி சனநாயகக் குடியரசு (Federal Democratic Republic of Ethiopia) என்பது கிழக்காப்பிரிக்காவில் ஆப்பிரிக்காவின் கொம்பில் அமைந்துள்ள ஓர் இறைமையுள்ள நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடக்கு, மற்றும் வடகிழக்கே எரித்திரியா, கிழக்கே சீபூத்தீ, சோமாலியா, மேற்கே சூடான், தெற்கு சூடான், தெற்கே கென்யா ஆகிய நாடுகள் உள்ளன. ஏறத்தாழ 100 மில்லியன் மக்கள் வாழும் இந்நாடு உலகின் நிலம்சூழ் நாடுகளில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நாடும், ஆப்பிரிக்காவிலேயே நைஜீரியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடும் ஆகும். இதன் மொத்தப் பரப்பளவு 1,100,000 சதுர கிலோமீற்றர்கள் (420,000 சதுரமைல்) ஆகும். அடிஸ் அபாபா இதன் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும்.


உலகின் மிகப் பழைய நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, தொடர்ச்சியான இறைமையைக் கொண்டு விளங்கும் ஒரே ஆபிரிக்க நாடும் ஆகும். ஆர்மீனியாவுக்கு அடுத்ததாக, உலகின் இரண்டாவது பழைமையான அதிகாரபூர்வ கிறிஸ்தவ நாடு என்ற பெருமையும் இதற்கு உண்டு.


அண்மைக்காலக் கண்டுபிடிப்புக்கள், இந்த நாடு மனித இனத்தின் தொட்டிலாக இருந்திருக்கக்கூடும் என்ற கருத்தையும் தோற்றுவித்துள்ளது. இங்கிருந்துதான் தற்கால மனித இனம் வெளியேறி மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பிற பகுதிகளுக்கும் சென்றதாக நம்பப்படுகின்றது. எத்தியோப்பிய முடியாட்சியின் வரலாறு கிமு இரண்டாயிரவாண்டுக்கு முந்தையது. பொது ஊழியின் முதல் நூற்றாண்டுகளில் அக்சம் இராச்சியம் இந்தப் பகுதி முழுமையிலும் ஒரே சீரான நாகரிகத்தைப் பேணியது.


19ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆபிரிக்கப் பகுதிகளைக் கைபற்றும் குடியேற்றவாத நாடுகளின் முயற்சிகளின்போது, ஆபிரிக்காவிற்கு முந்து, காலத்தில் எத்தியோப்பியாவின் படைத்துறை மட்டுமே தன்நாட்டைக் காப்பாற்றி பெருமிதம் கொண்டது. இதனால் பிற்காலத்தில் விடுதலை பெற்ற ஆபிரிக்க நாடுகள் எத்தியோப்பியக் கொடியின் வண்ணங்களை தங்கள் கொடிகளில் ஏற்றுக் கொண்டனர். 20ஆவது-நூற்றாண்டில் உலக நாடுகள் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அவையில் தன்னாட்சி பெற்ற முதல் ஆபிரிக்க நாடாக விளங்கியது. 1974இல் முதலாம் ஹைலி செலாசியின் ஆட்சி முடிவுற்றபோது சோவியத் ஒன்றியம் ஆதரவளித்த பொதுவுடைமைசார் படைத்துறைக்குழு, டெர்கு, ஆட்சியைக் கைப்பற்றியது. பின்னர் எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணியிடம் (EPRDF) ஆட்சி மாறியது. 1991 வரை இவர்களது ஆட்சித் தொடர்ந்தது.


எத்தியோப்பிக் என்றழைக்கப்படும் எத்தியோப்பியாவின் பண்டைய கி’இஜ் எழுத்துமுறை, இன்னும் உலகில் பயன்பாட்டில் உள்ள பழமையான எழுத்துக்களில் ஒன்றாகும். எத்தியோப்பிய நாள்காட்டியானது, கிரியோரிய நாட்காட்டிக்கு ஏறக்குறைய ஏழு வருடங்கள் மற்றும் மூன்று மாதங்கள் பிற்பட்ட, பொரன்னா நாட்காட்டியுடன் இணைந்து உள்ளது. பெரும்பான்மையான மக்கள் கிறித்தவர் (முதன்மையாக எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் த்வேஹேடோ திருச்சபை மற்றும் பேன்டேயே), மூன்றில் ஒரு பகுதி இஸ்லாமியர் (முதன்மையாக சுன்னி இஸ்லாமை) ஆவர். ஆப்பிரிக்காவின் பழமையான முஸ்லீம் குடியேற்ற பகுதியான நெகாஷில் பகுதி எத்தியோப்பியா நாட்டில் உள்ளது ஆகும். எத்தியோப்பிய மக்கள் தோகையில் கணிசமான யூத மக்கள், பெட்டி இஸ்ரேல் என அறியப்பட்டனர், 1980 ஆம் ஆண்டு வரை எத்தியோப்பியாவில் வசித்து வந்த இவரக்ளில், பெரும்பாலோர் படிப்படியாக இஸ்ரேலுக்கு குடியேறினர். எத்தியோப்பியா ஒரு பன்மொழி நாடாகும் இங்கு 80 இனக்குழுக்கள் உள்ளன. இவற்றில் மிகப்பெரிய நான்கு இனக்குழுக்கள் ஒர்மிஃபியா, அமரா, சோமாலி, டிக்ரேயன்ஸ் ஆகும். நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் குஷிடிக் அல்லது செமிடிக் கிளையின் ஆபிரோசியடிக் மொழிகள் பேசுகின்றனர். கூடுதலாக, தெற்கில் வாழும் சிறுபான்மை குழுக்களால் ஒமேனோடிக் மொழிகள் பேசப்படுகின்றன. நாட்டினுடைய இனக்குழு சிறுபான்மையினரால் நீலோ-சஹரன் மொழிகள் பேசப்படுகின்றன.


எதியோப்பியாவின் காஃபி என்ற இடத்தில் இருந்துதான் காபி கொண்டைகள் தோன்றின (இது பழைய எத்தியோப்பியா நிர்வாகத்தின் 14 மாகாணங்களில் ஒன்றாக இருந்தது). இந்த நாடு பரந்த வளமான மேற்கு, காடுகள், மற்றும் பல ஆறுகள், அதன் வடக்கே உலகின் மிகவும் வெப்பமான பக்தியான டால்லால் ஆகியவற்றை கொண்ட இயற்கை முரண்பாடுகளுடைய நிலப் பகுதியை உடையது. எத்தியோப்பியன் சிறப்பம்சம் என்றால் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய தொடர்ச்சியான மலைத் தொடர்களையும், ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய குகைகளான சோப் ஓமர் குகைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் ஆப்பிரிகாவிலேயே அதிகமான யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் எத்தியோப்பியாவில் உள்ளன.


எத்தியோப்பியா ஐ.நா.வின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒன்றாகவும், ஜி -24, கூட்டுசேரா இயக்கம், ஜி 77, ஆபிரிக்க ஒற்றுமை அமைப்பு போன்ற அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபா ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைமையகமாக செயல்படுகிறது, மேலும் பான் ஆபிரிக்க சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ், ஆபிரிக்க ஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணையம், ஆப்பிரிக்க விமானப் பயிற்சித் தலைமையகம், ஆபிரிக்க ஸ்டாண்ட்பி ஃபோர்ஸ், மற்றும் ஆப்பிரிக்காவில் கவனம் செலுத்தும் பல சர்வதேச தொண்டு நிறுவனங்கள் போன்றவை செயல்படுகின்றன. 1970 கள் மற்றும் 1980 களில், எத்தியோப்பியா உள்நாட்டுப் போர்கள் மற்றும் கம்யூனிச விரோதப் போக்கினால் பாதிக்கப்பட்டது, இதனால் அதன் பொருளாதாரத்தை அழித்தது. எனினும் நாடு அண்மைக்காலமான மீண்டு வருகிறது, இப்போது கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆபிரிக்காவில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) கண்டுவருகிறது. குளோபல் ஃபயர் பவர் கூற்றுப்படி, எதியோப்பியா உலகில் 42 வது மிக சக்திவாய்ந்த இராணுவத்தையும், ஆபிரிக்காவின் மூன்றாவது சக்திவாய்ந்ததாக இராணுவத்தையும் கொண்டதாக உள்ளது.


பெயர்முறை


கிரேக்க பெயரான Αἰθιοπία (Αἰθίοψ, Aithiops, ‘எதியோப்பியன்’) என்பது ஒரு கூட்டுச் சொல்லாகும், இது இரண்டு கிரேக்கச் சொற்களான, αἴθω + ὤψ (aitho “I burn” + ops “face”) இருந்து பெறப்பட்டது. வரலாற்றாசிரியரான எரோடோட்டசு, சகாராவுக்கு கீழே உள்ள ஆப்பிரிக்காவின் பகுதிகளைக் குறிப்பிடப் பயன்படுத்தினார், பின்னர் எக்குமீனை (குடியேற்றப் பகுதி ) என்பதை குறிப்பிடப் பயன்படுத்தினார்.

வெளி இணைப்புகள்

எத்தியோப்பியா – விக்கிப்பீடியா

Ethiopia – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *