பாரதிதாசன் | Bharathidasan

பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 – ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் ‘கனகசுப்புரத்தினம்’ ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், ‘பாரதிதாசன்’ என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துக்களால், புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

புரட்சிக்கவி பாரதிதாசன், ஏப்ரல் 29, 1891 ஆம் ஆண்டு புதுவையில் செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபில், பெரிய வணிகராயிருந்த, கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும், தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலேயே, கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும், முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின், இரண்டாண்டில், கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவர் அரசினர் கல்லூரித் தமிழாசிரியாரானார்.

இசையுணர்வும், நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை, அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில், விருந்துக்குப் பின், சி. சுப்பிரமணிய பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே, அவரை, பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. ஆயினும் அதற்குமுன்பே அவர் பாரதியாரைச் சந்தித்திருப்பது பாரதியார் தாமே எழுதின தராசு என்ற தொடரில் பாரதிதாசனைப் பெயர் சுட்டாமே ஒரு கைக்கோளச் சாதித் தமிழ்க்கவிராயர் தம்மிடம் வந்து எங்கெங்குக் காணினும் சக்தியடா- தம்பி ஏழு கடல் அவள் மேனியடா!” என்று ஒரு பாடலைப்பாடிக் காட்டியதாகக் கூறியிருப்பது இவரே அந்தக் கவிராயர் என்று உறுதிப்படுத்துகிறது.

“தன் நண்பர்கள் முன்னால் பாடு” என்று பாரதி கூற, பாரதிதாசன் “எங்கெங்குக் காணினும் சக்தியடா” என்று ஆரம்பித்து, இரண்டு பாடல்களைப் பாடினார். இவரின் முதற் பாடல், பாரதியாராலேயே ‘சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது’ என்றெழுதப்பட்டு, ‘சுதேசமித்திரன்’ இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில், “கண்டழுதுவோன்”, “கிறுக்கன்”, “கிண்டல்காரன்”, “பாரதிதாசன்” என, பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞருமான பாரதிதாசன், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946, சூலை 29இல் அறிஞர் அண்ணாவால், கவிஞர் “புரட்சிக்கவி” என்று பாராட்டப்பட்டு, ரூ.25,000 வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள், நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான “பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு, 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல் பொது உடைமையாக்கப்பட்டன.

பாரதியார் மீது பற்று

தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.

மறைவு

பாரதிதாசன் ஏப்ரல் 21, 1964 அன்று காலமானார்.

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்

 • “எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே”..
 • புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
  போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்..
 • தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்..
 • எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!..

காலவரிசை

 • 1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு, மகனாகப் பிறந்தார்.
 • 1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
 • 1920: பழநி அம்மையார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
 • 1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
 • 1964: ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
 • 1970: அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.

பாரதிதாசனின் ஆக்கங்கள்

பாரதிதாசன் தனது எண்ணங்களை கவிதை, இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை ஆகிய வடிவங்களில் வெளியிட்டார். அவற்றுள் சில:

 • அம்மைச்சி (நாடகம்)
 • உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948)
 • உரிமைக் கொண்டாட்டமா?, குயில் (1948)
 • எது பழிப்பு, குயில் (1948)
 • கடவுளைக் கண்டீர்!, குயில் (1948)
 • கழைக்கூத்தியின் காதல் (நாடகம்)
 • கலை மன்றம் (1955)
 • கற்புக் காப்பியம், குயில் (1960)
 • சத்திமுத்தப் புலவர் (நாடகம்)
 • நீலவண்ணன் புறப்பாடு
 • பிசிராந்தையார், (நாடகம்) பாரி நிலையம் (1967)
 • பெண்கள் விடுதலை
 • விடுதலை வேட்கை
 • வீட்டுக் கோழியும் – காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959)
 • ரஸ்புடீன் (நாடகம்)

இவை தவிர திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.

பாரதிதாசன் நூல்கள்

பாரதிதாசன் படைப்புகள் பல, அவர் வாழ்ந்தபொழுதும், அவரின் மறைவிற்குப் பின்னரும், நூல்வடிவம் பெற்றுள்ளன. அவற்றின் பட்டியல்:

வ.எண்நூலின் பெயர்முதற்பதிப்பு ஆண்டுவகைபதிப்பகம்குறிப்பு
1அகத்தியன்விட்ட புதுக்கரடி1948காவியம்பாரதிதாசன் பதிப்பகம், புதுவைபாரதிதாசன் கவிதைகள் – மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
2சத்திமுத்தப்புலவர்1950நாடகம்பாரதிதாசன் பதிப்பகம், புதுவை 
3இன்பக்கடல்1950நாடகம்பாரதிதாசன் பதிப்பகம், புதுவை 
4அமிழ்து எது?1951கவிதை பாரதிதாசன் கவிதைகள் – மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
5அமைதி1946நாடகம்செந்தமிழ் நிலையம், இராமச்சந்திராபுரம் 
6அழகின் சிரிப்பு1944கவிதைமுல்லை பதிப்பகம், சென்னை 
7இசையமுது (முதலாம் தொகுதி)1942இசைப்பாடல்பாரத சக்தி நிலையம், புதுவை 
8இசையமுது (இரண்டாம் தொகுதி)1952இசைப்பாடல்பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி 
9இந்தி எதிர்ப்புப் பாடல்கள்1948இசைப்பாடல்  
10இரணியன் அல்லது இணையற்ற வீரன்1939நாடகம்குடியரசுப் பதிப்பகம்1934 – செப்டம்பர் 5ஆம் நாள் பெரியார் தலைமையில் அரங்கேற்றப்பட்டது.
11இருண்டவீடு1944காவியம்முத்தமிழ் நிலையம், கோனாபட்டு, புதுக்கோட்டை 
12இலக்கியக் கோலங்கள்1994குறிப்புகள்நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னைச. சு. இளங்கோ பதிப்பு
13இளைஞர் இலக்கியம்1958கவிதை  
14உலகம் உன் உயிர்1994கவிதைநியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னைவெவ்வேறு இதழ்களில் எழுதிய தலையங்கக் கவிதைகள். ச. சு. இளங்கோ பதிப்பு
15உலகுக்கோர் ஐந்தொழுக்கம்1994கட்டுரைகள்நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னைச.சு.இளங்கோ பதிப்பு. தலையங்கக் கட்டுரைகள்
16எதிர்பாராத முத்தம்1938கவிதை 
17எது இசை?1945சொற்பொழிவும் பாடல்களும்கமலா பிரசுராலயம், 59 பிராட்வே, சென்னைபாரதிதாசனும் பாடல்களும் அண்ணாதுரையின் கட்டுரையும் சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், சர் மு. அண்ணாமலை செட்டியார், ராஜாகோபாலாச்சாரியார் ஆகியோரின் கருத்துகளும் அடங்கிய தொகுப்பு[5]
18ஏழைகள் சிரிக்கிறார்கள்1980சிறுகதைகள்பூம்புகார் பிரசுரம், சென்னைச. சு. இளங்கோ பதிப்பு.
19ஏற்றப் பாட்டு1949இசைப்பாடல் பாரதிதாசன் கவிதைகள் – மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
20ஒரு தாயின் உள்ள மகிழ்கிறது1978இசைப்பாடல்பூம்புகார் பிரசுரம், சென்னைத.கோவேந்தன் பதிப்பு
21கடற்மேற் குமிழிகள்1948காவியம் பாரதிதாசன் கவிதைகள் – மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
22கண்ணகி புரட்சிக் காப்பியம்1962காவியம்அன்பு நிலையம், சென்னை 
23கதர் இராட்டினப்பாட்டு,1930இசைப்பாடல்காசி ஈ லஷ்மண் பிரசாத், ஶ்ரீவேல் நிலையம், புதுச்சேரி 
24கவிஞர் பேசுகிறார்1947சொற்பொழிவுதிருச்சிஅன்பு ஆறுமுகம் என்பவரால் தொகுக்கப்பட்டது
25கழைக்கூத்தியின் காதல்1951நாடகம்  
26கற்கண்டு1945நாடகம் பாரதிதாசன் நாடகங்கள் தொகுதியில் இடம்பெற்றுள்ளது
27காதலா? கடமையா?1948காவியம்பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி 
28காதல் நினைவுகள்1944கவிதைசெந்தமிழ் நிலையம், இராமச்சந்திரபுரம் 
29காதல் பாடல்கள்1977கவிதைபூம்புகார் பிரசுரம், சென்னைத.கோவேந்தன் பதிப்பு
30குடும்பவிளக்கு – முதல் பகுதி: ஒருநாள் நிகழ்ச்சி1942காவியம்பாரத சக்தி நிலையம், புதுவை 
31குடும்ப விளக்கு – 2ஆம் பகுதி: விருந்தோம்பல்1944காவியம்முல்லைப் பதிப்பகம், சென்னை 
32குடும்ப விளக்கு – 3ஆம் பகுதி: திருமணம்1948காவியம்முல்லைப் பதிப்பகம், சென்னை 
33குடும்ப விளக்கு – 4ஆம் பகுதி: மக்கட்பேறு1950காவியம்முல்லைப் பதிப்பகம், சென்னை 
34குடும்ப விளக்கு – 5ஆம் பகுதி: முதியோர் காதல்1950காவியம்முல்லைப் பதிப்பகம், சென்னைஐந்துபகுதிகளும் இணைந்த பதிப்பு பின்னாளில் வந்தது.
35குமரகுருபரர்1992நாடகம்காவ்யா, பெங்களூர்1944ஆம் ஆண்டில் இந்நாடகம் 1992ஆம் ஆண்டில் தமிழ்நாடனால் பதிப்பிக்கப்பட்டது
36குயில் பாடல்கள்1977கவிதைபூம்புகார் பிரசுரம், சென்னைத.கோவேந்தன் பதிப்பு
37குறிஞ்சித்திட்டு1959காவியம்பாரி நிலையம், சென்னை 
38கேட்டலும் கிளத்தலும்1981கேள்வி-பதில்பூம்புகார் பிரசுரம், சென்னைச. சு. இளங்கோ பதிப்பு
39கோயில் இருகோணங்கள்1980நாடகம்பூம்புகார் பிரசுரம், சென்னைச. சு. இளங்கோ பதிப்பு
40சஞ்சீவி பர்வதத்தின் சாரல்1930காவியம்ம. நோயேல் வெளியீடு, புதுவைபாரதிதாசன் கவிதைகள் – முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
41சிரிக்கும் சிந்தனைகள்1981துணுக்குகள்பூம்புகார் பிரசுரம், சென்னைச. சு. இளங்கோ பதிப்பு
42சிறுவர் சிறுமியர் தேசியகீதம்1930கவிதை  
43சுயமரியாதைச் சுடர்1931பாட்டு கிண்டற்காரன் என்னும் புனைப்பெயரில் எழுதிய 10 பாடல்களைக் கொண்டது. குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படையல்
44செளமியன்1947நாடகம்  
45சேரதாண்டவம்1949நாடகம்பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி 
46தமிழச்சியின் கத்தி1949காவியம்பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி 
47தமிழியக்கம்1945கவிதைசெந்தமிழ் நிலையம், ராயவரம்ஒரே இரவில் எழுதியது
48தமிழுக்கு அமிழ்தென்று பேர்1978கவிதைபூம்புகார் பிரசுரம், சென்னைத.கோவேந்தன் பதிப்பு
49தலைமலை கண்ட தேவர்1978நாடகம்பூம்புகார் பிரசுரம், சென்னைச. சு. இளங்கோ பதிப்பு
50தாயின் மேல் ஆணை1958கவிதை  
51தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு1930பாட்டும. நோயேல் வெளியீடு, புதுவைபாரதிதாசன் கவிதைகள் – மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
52திராவிடர் திருப்பாடல்1948கவிதை பாரதிதாசன் கவிதைகள் – மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
53திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்1949கவிதை பாரதிதாசன் கவிதைகள் – மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
54தேனருவி1956இசைப்பாடல்பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி1978ஆம் ஆண்டில் சென்னை பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட த. கோவேந்தன் பதிப்பில் புதிய பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
55தொண்டர் வழிநடைப் பாட்டு1930பாட்டு  
56நல்லதீர்ப்பு1944நாடகம்முல்லைப் பதிப்பகம், சென்னை 
57நாள் மலர்கள்1978கவிதைபூம்புகார் பிரசுரம், சென்னைத.கோவேந்தன் பதிப்பு
58படித்த பெண்கள்1948நாடகம்  
59பன்மணித்திரள்1964கவிதை  
60பாட்டுக்கு இலக்கணம்1980இலக்கணம்பூம்புகார் பிரசுரம், சென்னைச. சு. இளங்கோ பதிப்பு
61பாண்டியன் பரிசு1943காவியம்முல்லைப் பதிப்பகம், சென்னை 
62பாரதிதாசன் ஆத்திசூடி1948கவிதை  
63பாரதிதாசன் கதைகள்1955சிறுகதைஞாயிறு நூற்பதிப்பகம், புதுச்சேரிசிவப்பிரகாசம் பதிப்பு. புதுவை முரசு இதழில் வெளிவந்த 14 படைப்புகளின் தொகுப்பு
64பாரதிதாசனின் கடிதங்கள்2008கடிதங்கள் ச.சு.இளங்கோ பதிப்பு
65பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி)1938கவிதைகுஞ்சிதம் குருசாமி, கடலூர் 
66பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)1949கவிதைபாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரிஇ.பதிப்பு 1952
67பாரதிதாசன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி)1955கவிதை  
68பாரதிதாசன் கவிதைகள் (நான்காம் தொகுதி)1977கவிதைபாரி நிலையம், சென்னை. 
69பாரதிதாசன் நாடகங்கள்1959கவிதைபாரி நிலையம், சென்னை 
70பாரதிதாசனின் புதிய நாடகங்கள்1994நாடகங்கள்நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னைச.சு.இளங்கோ பதிப்பு
71பாரதிதாசனின் புதினங்கள்1992புதினம் ச.சு.இளங்கோ பதிப்பு
72பாரதிதாசன் பேசுகிறார்1981சொற்பொழிவு ச.சு.இளங்கோ பதிப்பு.
73பாரதிதாசன் திருக்குறள் உரை1992உரைபாரி நிலையம், சென்னைச.சு.இளங்கோ பதிப்பு
74பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்2012திரைக்கதைபாரி நிலையம், சென்னைச.சு.இளங்கோ பதிப்பு. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி, வளையாபதி ஆகிய திரைப்படங்களின் திரைக்கதை, உரையாடல்கள் பற்றிய ஆய்வும் பதிப்பும்
75பிசிராந்தையார்1967நாடகம் 1970ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்றது.
76புகழ்மலர்கள்1978கவிதைபூம்புகார் பிரசுரம், சென்னைத.கோவேந்தன் பதிப்பு
77புரட்சிக் கவி1937கவிதைஶ்ரீசாரதா பிரஸ், புதுவைபாரதிதாசன் கவிதைகள் – முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
78பொங்கல் வாழ்த்துக் குவியல்1954கவிதைபாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி 
79மணிமேகலை வெண்பா1962கவிதை  
80மயிலம் சுப்பிரமணியர் துதியமுது1926இசைப் பாடல்காசி-லஷ்மண் பிரசாத், வேல் நிலையம், புதுச்சேரி 
81மயிலம் ஸ்ரீ சிவசண்முகக்கடவுள் பஞ்சரத்நம்1925கவிதைஜெகநாதம் பிரஸ், புதுவை 
82மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு1920இசைப்பாடல்ஜெகநாதம் பிரஸ், புதுவை 
83மானுடம் போற்று1984கட்டுரைகள்பூம்புகார் பிரசுரம், சென்னைச.சு.இளங்கோ பதிப்பு
84முல்லைக்காடு1948கவிதைஞாயிறு நூற்பதிப்பகம், புதுச்சேரி 
85வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?1980இலக்கணம்பூம்புகார் பிரசுரம், சென்னைச.சு.இளங்கோ பதிப்பு
86வேங்கையே எழுக1978கவிதைபூம்புகார் பிரசுரம், சென்னைத.கோவேந்தன் பதிப்பு

திரையுலகில் பாரதிதாசன்

திராவிட இயக்கத் தலைவர்களுள் முதன்முதலாக திரைப்படத்துறைக்குள் நுழைந்தவர் பாரதிதாசனே ஆவார். 1937ஆம் ஆண்டில் திரைப்படத் துறைக்குள் நுழைந்த பாரதிதாசன் தனது இறுதிநாள் வரை அத்துறைக்கு கதை, திரைக்கதை, உரையாடல், பாடல், படத்தயாரிப்பு என பல வடிவங்களில் தனது பங்களிப்பை வழங்கிக்கொண்டு இருந்தார்.

திரைக்கதை, உரையாடல்

அவ்வகையில் அவர் பின்வரும் படங்களுக்கு திரைக்கதை, உரையாடல், பாடல் எழுதியனார்:

வ.எண்.திரைப்படத்தின் பெயர்ஆண்டு
1பாலாமணி அல்லது பக்காத்திருடன்1937
2இராமானுஜர்1938
3கவிகாளமேகம்1940
4சுலோசனா1944
5ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி1947
6பொன்முடி1949
7வளையாபதி1952
8குமரகுருபரர்
8பாண்டியன் பரிசு 
9முரடன்முத்து
10மகாகவி பாரதியார்

இவற்றுள் பாண்டியன் பரிசு, முரடன் முத்து, மகாகவி பாரதியார் ஆகிய படங்களை தானே சொந்தமாகத் தயாரிக்கும் முயற்சியில் தனது இறுதிக்காலத்தில் ஈடுபட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்.

திரைப்படப்பாடல்கள்

பாரதிதாசன் திரைப்படத்திற்கென தானே பல பாடல்களை இயற்றினார். அவர் வெவ்வேறு சூழல்களில் இயற்றிய பாடல்கள் சிலவற்றை சிலர் தத்தம் படங்களில் பயன்படுத்திக்கொண்டனர். அப்பாடல்களும் அவை இடம்பெற்ற திரைப்படங்களும் பின்வருமாறு:

வ.எண்பாடல்கள்திரைப்படம்ஆண்டு
1அனைத்துப் பாடல்களும்பாலாமணி அல்லது பக்காத்திருடன்1937
2அனைத்துப் பாடல்களும்ஸ்ரீ ராமானுஜர்1938
3அனைத்துப் பாடல்களும்கவி காளமேகம்1940
4வெண்ணிலாவும் வானும் போல…பொன்முடி1950
5துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ…ஓர் இரவு1951
6அதோ பாரடி அவரே என் கணவர்…கல்யாணி1952
7வாழ்க வாழ்க வாழ்கவே…பராசக்தி1952
8பசியென்று வந்தால் ஒரு பிடி சோறு…பணம்1952
9அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?…அந்தமான் கைதி1952
10குளிர்த்தாமரை மலர்ப்பொய்கை…வளையாபதி1952
11குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி…வளையாபதி1952
12தாயகமே வாழ்க தாயகமே வாழ்க…பூங்கோதை1953
13பாண்டியன் என் சொல்லை…..திரும்பிப்பார்1953
14ஆலையின் சங்கே நீ ஊதாயோ…ரத்தக் கண்ணீர்1954
15எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்என் மகள்1954
16நீலவான் ஆடைக்குள் உடல் …கோமதியின் காதலன்1955
17ஆடற்கலைக்கழகு தேடப்பிறந்தவள்…நானே ராஜா1955
18தலைவாரி பூச்சூடி உன்னை-பாட…ரங்கோன் ராதா1956
19கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே…குலதெய்வம்1956
20ஒரே ஒரு பைசா தருவது பெரிசா…பெற்ற மனம்1960
21பாடிப் பாடிப் பாடி வாடி…பெற்ற மனம்1960
22மனதிற்குகந்த மயிலே வான்விட்டு…பெற்ற மனம்1960
23தமிழுக்கும் அமுதென்று பேர்-அந்த…பஞ்சவர்ணக்கிளி1965
24எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்…கலங்கரை விளக்கம்1965
25வலியோர் சிலர் எளியோர் தமை…மணிமகுடம்1966
26புதியதோர் உலகம் செய்வோம்-கெட்டசந்திரோதயம்1966
27எங்கெங்குக் காணிணும் சக்தியடா !…நம்ம வீட்டுத் தெய்வம்1970
28சித்திரச் சோலைகளே-உமை நன்கு….நான் ஏன் பிறந்தேன்1972
29புதியதோர் உலகம் செய்வோம்பல்லாண்டு வாழ்க1975
30காலையிளம் பரிதியிலே …கண்ணன் ஒரு கைக்குழந்தை1978
31அம்மா உன்றன் கைவளையாய் …நிஜங்கள்1984
32கொலை வாளினை எடடா…சிவப்பதிகாரம்
33அவளும் நானும் அமுதும் தமிழும்அச்சம் என்பது மடமையடா2016

பாரதிதாசன் எழுதிய முன்னுரைகள்

வள்ளுவர் கண்ட நாடு, மு.த.வேலாயுதனார், சரோஜினி பதிப்பகம் புதுச்சேரி, 1951 

பாரதிதாசன் பற்றிய நூல்கள்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ரஜீத், 1945, மின்னல் பதிப்பகம், புஸ்லி வீதி, புதுச்சேரி

வெளி இணைப்புகள்

பாரதிதாசன் | Bharathidasan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.